"பிழைக்கத் தெரியாதவன்"  "இலஞ்சம் வாங்காத அரசு அலுவலர்களுக்கு விருது"!

"பிழைக்கத் தெரியாதவன்"  "இலஞ்சம் வாங்காத அரசு அலுவலர்களுக்கு  விருது"!

ம.பா.கெஜராஜ்,

 தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்ற நினைப்பு நம்மில் பெரும்பாலானோருக்கு தோன்றும்.

இதற்கான காரணத்தை தெரிந்து கொண்டால்தான் இதன் அவசியம் தெரியும்.

   நம் நாட்டில், தன்னலமற்று சேவை செய்வோருக்கு ரோட்டரி சங்கம், லயன் சங்கம், ஜூனியர் சேம்பர், போன்ற சமூக சேவை நிறுவனங்கள் பல்வேறு விருதுகள், பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவைகளை வழங்கி சேவை செய்பவர்களை கௌரவித்து வருகின்றன.

   இதேபோல் தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றி வருபவர்களை, பல்வேறு இடங்களில் இயங்கும் தமிழ் அமைப்புகள்  அவர்களை பாராட்டி விருதுகள், வெகுமதிகள், பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவைகளை வழங்கி வருகின்றன.

   இது தவிர பல்வேறு சமூக சேவை நிறுவனங்களும்,  பல்வேறு துறையில் சேவை செய்பவர்களை பாராட்டி, விருதுகளை வழங்கி வருகின்றன. (சில டுபாக்கூர் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன)

  இதே போல் பெண்கள் நலன், குழந்தைகள் நலன், இளைஞர் நலன்,

மாற்றுத்திறனாளிகள் மேம்பாடு, ஆதரவற்ற வர்களுக்கான சேவை, தமிழ் வளர்ச்சி, உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆற்றி வருபவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள், வெகுமதிகள் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றன.

இதேபோல் சில அரசியல் கட்சிகளும் பல்வேறு துறையில் சிறந்து விளங்குபவர்களையும், சேவை செய்பவர்களையும், தேர்வு செய்து பாராட்டி விருதுகளை வழங்கி வருகின்றன.

  ஆனால் இன்றைக்கு பெரும்பாலான மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக, தேவையான சான்றிதழ்களை பெறுவதற்காகவும், நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காகவும்மாநில அரசின் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களையும், சிலவற்றிற்கு மத்திய அரசின் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களையும் நாடுகின்றனர்.

   அந்த  அலுவலகங்களில் அந்தந்த துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் மக்களுக்காக பணி செய்யவே அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்காக அரசாங்கம் அவர்களுக்கு சம்பளம் தவறாமல் வழங்குகிறது.

  இது தவிர அரசு அலுவலர்களுக்கு அவ்வப்போது சம்பள உயர்வு, இதர சலுகைகள் என்று வழங்கி வருகின்றது. அதையும் கடந்து கிம்பளமும் உண்டு.

  அந்த வகையில், அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் கடை நிலை ஊழியர் முதல் உயர் அலுவலர் வரை நேர்மையாக வேலை செய்கிறார்களா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 ஒரு சில நேர்மையான அலுவலர்கள்  தவிர பெரும்பாலானோர் இலஞ்சம் அல்லது அதற்கு ஈடான ஏதோ ஒரு சலுகைகளை பெற்றுக் கொண்டுதான் பொதுமக்களின் வேலைகளை முடித்துக் கொடுக்கிறார்கள்.

  இதை யாரும் மறுக்க முடியாது. அரசு அலுவலகங்களில் "லஞ்சம் வாங்குவது குற்றம்" என்ற அறிவுப்பு பலகை இருக்கிறது.

ஆனால் இது மாதிரி குற்ற செயலை செய்யாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் என்று கேட்டால், ஆயிரத்தில் ஒருவரை கூட கண்டுபிடிப்பது கஷ்டம் என்று சொல்லலாம்.

ஒரு ஒரு நாட்டை ஆள்வது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். இந்த பிரதிநிதிகள் தங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வதாக வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வருகிறார்கள்.

  ஆட்சிக்கு வந்து அரசு கட்டிலில் அமர்ந்து ஆட்சி செய்பவர்கள் அனைவரும் படித்து இருக்கின்றார்களா என்று கேட்டால் இதற்கு ஆம், இல்லை என்ற இரண்டு பதிலும் வரும். அரசை நடத்தும் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் சிலர் படித்து இருக்க மாட்டார்கள்.

  அந்தத் துறையைப் பற்றி கூட பலருக்கு சரிவர தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களை வழிநடத்துபவர்கள் அந்த துறையில் இருக்கும் அரசின் அலுவலர்கள்தான்.

 அமைச்சர்களுக்கு துறையைப் பற்றியும், துறையின் செயல்பாடுகளைப் பற்றியும், அந்த துறையின் அலுவலர்கள் தான் சொல்லிக் கொடுத்து வழி நடத்துகிறார்கள்.

  துறையின் செயல்பாடுகளையும், நுணுக்கங்களையும் தெரிந்து கொண்ட அமைச்சர்கள் அதற்குப் பிறகு அவர்கள் சொல்லியபடி அலுவலர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும் உண்டு. விஷயம் தெரிந்த அமைச்சர்கள் முதலில் இருந்தே தங்கள் துறை அலுவலர்களை தாங்கள் சொல்லியபடி தான் கேட்க வேண்டும் என்று  சொல்வதும் உண்டு.

  எதை செய்தாலும் சட்டப்படி தான் செய்ய வேண்டும் என்ற நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விட துறையின் சட்ட விதிகள் அந்த துறையின் அலுவலர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும்.

   எனவே ஒரு துறையை சரியாக வழி நடத்த வேண்டும் என்றால் இந்தத் துறையில் பணிபுரியும் உயர் அலுவலர் முதல் கடை நிலை ஊழியர் வரை

அனைவரும் தங்கள் கடமையினை சரியாக செய்தால்தான் அரசு நல்ல முறையில் நடக்கும்.

  பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்தும்  தங்கு தடையின்றி என்று சென்று அடையும். பொதுமக்களும் தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்ததே என்று மகிழ்ச்சிய அடைவார்கள்.

 அரசு துறையில் அரசு அலுவலர்கள் எந்த விதமான கையூட்டும் பெறாமல், எந்த விதமான அலை கழிப்பும் இல்லாமல் பொதுமக்களுக்கு தேவையானவற்றை சட்டப்படி காலதாமதமின்றி செய்து கொடுத்தால்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். குறிப்பாக ஏழை, எளியோர் பயன்பெறுவார்கள்.

  பொதுமக்களின் உயிர்நாடியாக விளங்கும் அரசு துறைகளில் பணியாற்றுவார்கள் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. தூய்மையானவர்கள் அலுவலர்களாக இருந்தால் இந்த நாடு விரைவில்

முன்னேறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

  எனவே இத்தகைய லஞ்சம் வாங்காத தூய்மையான அரசு அலுவலர்களை பெரும்பாலும் யாரும் பாராட்டுவதில்லை. லஞ்சம் வாங்காத அலுவலரை அதனால் பயனடைந்தவர் மட்டும் மனதளவில் பாராட்டுவார்.

  ஆனால் லஞ்சம் வாங்காமல் கடமையாற்றும் அரசு அலுவலர்கள் போற்றத்தக்கவர்கள். பாராட்டத்தக்கவர்கள். அவர்களுக்கு அவரைச் சுற்றி இருப்பவர்கள் வைத்திருக்கும் பெயர் "பிழைக்கத் தெரியாதவன்".

உண்மையில் இவர்களை யாரும் வெளி கொணர்வதில்லை. மாறாக அவர்களுக்கு அவர்களை சுற்றி இருப்பவர்கள் (இலஞ்சம்  வாங்குபவர்கள்)

கெடுதலையே செய்ய விரும்புகிறார்கள்.

 அதனால் நல்ல மனம் கொண்ட இவர்களும் பின்னர் மாற வாய்ப்பிருக்கிறது. அவர்களால் இலஞ்சம் வாங்கி  மற்றவர்கள் போல் பகட்டான வாழ்வை வாழ முடிவதில்லை. சுற்றி இருப்பவர்களிடம் 'பிழைக்கத் தெரியாதவன்என்ற பெயரோடு வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அரசு அலுவலகங்களில் இலஞ்சம் வாங்காமல், பொதுமக்களை அலைக்கழிக்கவும் செய்யாமல்  தங்கள் கடமையினை செவ்வனே ஆற்றி பணியாற்றுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருதுகளை, பாராட்டு சான்றிதழ்களை அளித்து கௌரவிக்க செய்தி நிறுவனம் ஒன்று விரும்புகிறது.

  ஒவ்வொரு துறையிலும் உள்ள அலுவலகங்களில்

பணிபுரியும் அலுவலர்களை கண்டறிந்து அவர்களைப் பற்றிய முழு தகவல்களையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும்..

   நம்முடைய குழு அதன் உண்மை தன்மையினை ஆராய்ந்து தகுதி இருப்பின் அவர்களுக்கு விருதும், பாராட்டு சான்றிதழும், வழங்கி கௌரவப்படுத்துவோம்.

இந்த தகுதி உள்ள அலுவலர்கள்

அவர்களே தங்களுடைய  விண்ணப்பித்தினை தங்களைப் பற்றிய முழு விபரங்களுடன்

சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 31-3-2026.

 அதற்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு விருதுக்கு எடுத்துக்கொண்டு பரிசீலிக்கப்படும்.

  விண்ணப்பங்களின் எண்ணிக்கையை வைத்தே லஞ்ச லாவண்யத்தின் விகிதத்தை அறிய இது உதவும், மேலும் விண்ணப்பிபதற்காக அரசும் அடிகோலும் என நம்புவோம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய தபால் முகவரி. மற்றும் மின்னஞ்சல் முகவரி

ஆசிரியர்

"இராணித் தேனி"

நெ.21. நகராட்சி கட்டிடம்,

புதிய பேருந்து நிலையம்,

இராணிப்பேட்டை, இராணிப்பேட்டை மாவட்டம்.

ranithenieditor@gmail.com