முதல்வர் மகனாகவும் முன்னாள் முதல்வர் பேரனாகவும்! உதயநிதி!
ஜி கே சேகரன்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற வேட்பாளர் நல்லதம்பி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் கவிதா தண்டபாணி ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான ஒன்றான மகளிர் உரிமை தொகை 1000 வழங்கப்பட்டு வருகிறது தேர்தலில் வெற்றி பெற்றால் 2000 ரூபாயாக வழங்கப்படும் என கூறினார்.
ஒன்று முதல் ஐந்தாவது வகுப்பு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தினை செயல்படுத்தி உள்ளோம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எட்டாவது வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படும்.
8000 கொண்ட கூப்பன் வழங்கப்படும் அதில் உங்களுக்கு தேவையான டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் வாங்கிக் கொள்ளலாம் என கூறினார்.
மேலும் அதிமுக பொது பிரச்சாரம் செய்து வருகிறார்கள் திமுக ஆட்சியில் பள்ளி பயிலுபவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார்கள் ஆனால் திராவிட மாடியில் கல்லூரியில் பயிலும் 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது என கூறினார்.
இந்த தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளராக களம் இறங்கும் திருப்பத்தூர் சட்டமன்ற வேட்பாளர் நல்லதம்பி யையும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கவிதா தண்டபாணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என உங்களை முதல்வர் மகனாகவும் முன்னாள் முதல்வர் பேரனாகவும் கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.

admin
