பைனான்ஸ்காரர்களால் பந்தாடப்பட்ட சிறுவன்!

பைனான்ஸ்காரர்களால் பந்தாடப்பட்ட சிறுவன்!

ஜி.கே.சேகரன்,

பைனான்ஸ் கட்டவில்லை என கர்ப்பிணி பெண்ணை தகாத வார்த்தையில் பேசிய ஊழியர்கள்! தட்டிக் கேட்கச் சென்ற சிறுவனை தூக்கி ஊழியர் பந்தாடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு! மல்யுத்தத்தை மிஞ்சிய சம்பவம்!

  திருப்பத்தூர் மாவட்டம் கதிரி மங்கலம் அடுத்த நேருஜி நகர் பகுதியை சேர்ந்த ராஜி மனைவி புவனேஸ்வரி (29) இவர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள பெல் ஸ்டார் நிதி நிறுவனத்தில் 50,000 பைனான்ஸ் எடுத்ததாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் அனைத்து தவணைகளையும் முறையாக கட்டிய நிலையில்  5,500 மட்டும் தற்போது வருகின்ற நான்காம் தேதி கட்ட வேண்டும் என கூறப்படுகிறது.

   அந்த தவணையை தற்போதைய கட்ட வேண்டும் என கூறி ஊழியர்கள் புவனேஸ்வரியின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

  இதனால் ஆத்திரமடைந்த புவனேஸ்வரின் உறவுக்கார சிறுவன் செழியன்(16) என்பவர் எதற்கு ஆபாசமாக பேசுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பைனான்ஸ் ஊழியர் திடீரென அந்த சிறுவனை சரமாரியாக தாக்கி   மல்யுத்தத்தில்  வருவது போல தலைக்கு மீது தூக்கி போட்டு பந்தாடினார்.

  இதன் வீடியோ அருகே உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது இதனால் காயமடைந்த சிறுவன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  மேலும் இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.