மாணவிகளுக்கு சில்மிஷம் கொடுக்கும் வாத்தியார்களை காப்பாற்றுவதா?!

மாணவிகளுக்கு சில்மிஷம் கொடுக்கும் வாத்தியார்களை காப்பாற்றுவதா?!

ஜி.குலசேகரன்,

அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு! மூடி மறைக்கும் அதிகாரிகள்-விஷ்வ இந்து பரிஷத்  மற்றும் வன்னிய சங்கம்   சார்பில் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.

  திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் விஸ்வா இந்து பரிஷத் அமைப்பினர் மற்றும் வன்னியர் சங்கம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர்.

  அந்த புகாரில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது.

 அதன் அடிப்படையில் மாவட்ட கல்வித்துறை சிறார் அமைப்பு குழுவினர் விசாரணை நடத்தியதாகவும் அந்த விசாரணையில் அதிகாரிகள் சிலர் எழுத்து மூலமாகவும் வாய்வழி மூலமாகவும் தகவல் பெற்று சென்றது.

 ஆனால் இதுவரை புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது உண்மையை மறைக்கக் கூடிய செயலாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

 அதனால் உடனடியாக அதனை தெளிவுபடுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையிலும் தவறு செய்த ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.