தம்பிதுரை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்!

தம்பிதுரை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்!

ஜி.குலசேகரன்,

  தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருப்பத்தூர் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் கட்சிஅலுவலகத்தை மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

  திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) வேட்பாளராக போட்டியிடும் ஞானசேகர் அறிமுகக் கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வீரமணி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை கலந்து கொண்டு, வேட்பாளர் ஞானசேகரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினர்.

  முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), பாரதிய ஜனதா கட்சி (பாஜக) உள்ளிட்ட கட்சிகளின் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

 இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சி அலுவலகம் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

  இதில் பாமக, பாஜக, அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.