திமுக நகர பொருளாளருக்கு மண்டை உடைப்பு!பொதுமக்கள் பீதி!

ஜி.கே.சேகரன்,

   திருப்பத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் அலுவலகம் சூறை!. திமுக நகர பொருளாளருக்கு மண்டை உடைப்பு!. பதவி பறிபோகும் ஆத்திரத்தில் திமுக உட்கட்சி மோதல்

   திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம்,கலைகட்டியிருக்கிறது.

   இந்த நிலையில் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள மாவட்ட பொறுப்பாளரும், சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஸ்ரீதரன் தலைமையில் வார்டு பிரதிநிதிகளிடம் விருப்பமனுவை பெற்று வந்துள்ளார். அப்போது திருப்பத்தூர் பகுதியில் இருந்து 3 கோஷ்டிகள் சென்ற நிலையில் அதில் இரண்டு கோஷ்டிகளுக்கு  வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.

   பின்னர் அதில் ஒரு தரப்பினர் அலுவலகத்தில் இருந்த கண்ணாடி கதவை உடைத்து சூறையாடி உள்ளனர். பின்னர் நகர செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்த சந்திரசேகர் என்பவரை தாக்கி உள்ளனர்.

   பின்னர் அவருக்கு ஆதரவாக சென்ற நகர பொருளாளர் ஸ்ரீதர் என்பவரை தலையில் பலமாக தாக்கி அருகில் இருந்த காரை உடைத்து உச்ச கட்ட அராஜகத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

  அதில் ஸ்ரீதருக்கு மண்டை உடைந்து இரத்தம் வந்ததும் அடிதடி செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.

   காயம் அடைந்த ஸ்ரீதர் என்பரை மீட்டு திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதுவரை அடிதடி சம்பந்தமாக புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

 இந்த காட்சிகளை கண்ட பொது மக்கள் பீதியடைந்துள்ளார்கள்.