மகளிர் அணியின் பலான ஆடியோவும் அ.தி.மு.க.பிரமுகர்களும்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
ஆபாச ஆடியோ ஒன்று வலைதளங்களில் பரவி வருகிறது.
இதில் ஸ்ரீவில்லிபுத்துார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மான்ராஜ் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் ஒரே அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மான்ராஜ். இவரும் கட்சி மகளிரணியை சேர்ந்த பெண் ஒருவரும், அலைபேசியில் ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த ஆடியோவில் தங்களின் தனிப்பட்ட பேச்சு மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த சில அ.தி.மு.க., பிரமுகர்களின் செயல்பாடுகள் குறித்த ஆபாச உரையாடலும் பதிவாகியுள்ளது.
இது குறித்து மான்ராஜ் கூறுகையில், ''இது முழுக்க செட்டப் செய்யப்பட்ட ஆடியோ பதிவாகும். கட்சி நிர்வாகி ஒருவரின் சதியே,'' என்றார்.
இது போல பல ஆடியோக்கள் உள்ளதாம்.