17 சீட் அனுமதிப்பட்டதால் டூரிஸ்ட் கேப்களுக்கு ஆபத்தா?
உ.சசிகுமார்,
குக்கிராமங்களுக்கும் செல்லும் வகையில் மினி பேருந்துகள் திட்டத்தை புதுப்பித்து கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதில் இதுவரை 1,000 ஆபரேட்டர்கள் மட்டுமே பதிவு செய்திருக்கின்றனர்.
தமிழக அரசின் திட்டத்தின்படி 25,000 கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கும் வகையில் குறைந்தது 5,000 மினி பேருந்துகள் தேவைப்படுகின்றன.
இந்நிலையில், மினி பேருந்துகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனியார் வேன்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதி அளிக்கக் கூடாது.
இருக்கைக்கு ஏற்ப மட்டுமே பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும், கேப் முறையில் மினி பேருந்துகளை இயக்க
அந்த வகையில், இம்மாத இறுதிக்குள் 2,000 வேன்கள் பொதுப் போக்குவரத்து சேவையில் இணையும் என எதிர்பார்க்கிறோம். இந்த வகை வேன்களில் உயரம் குறைவாக இருக்கும் என்பதால் நின்று கொண்டு பயணிக்க செல்வதற்கு அனுமதி இல்லை. இதுபோன்று வேன் வசதிகளானது மலைப் பகுதிகள், கிராமப் பகுதிகள் மற்றும் குறுகலான சாலைகள் கொண்ட பகுதிகளில் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் என்.முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், வேன்களை மினி பேருந்துகளை மாற்றி பயன்படுத்தும் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்யுங்கள். இதுபற்றி விரிவான அறிக்கையை அடுத்த ஒரு மாதத்தில் சமர்பிக்க வேண்டும். எந்தெந்த பகுதிகளில் மினி பேருந்து வசதிகள் தேவைப்படுகின்றன என்பது பற்றி விவரங்கள் சேகரித்து அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

admin
