20 கிலோ கஞ்சா பறிமுதல்!திருப்பத்தூர் கலால் போலீசார் வழக்கு பதிவு!

20 கிலோ கஞ்சா பறிமுதல்!திருப்பத்தூர் கலால் போலீசார் வழக்கு பதிவு!

ஜி.கே.சேகரன்,

  தன்பாத் என்கிற ரயிலில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ கஞ்சா பறிமுதல்! நான்கு பேர் கைது!மத்திய நுண்ணறிவு போலீசார் நடவடிக்கை.

  ஜார்கண்டிலிருந்து ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அந்த ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.  

  அப்போது ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய இடைப்பட்ட பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஜெனரல் பெட்டியில் இரண்டு டிராவல் பேக்குகள் இருந்தன அதனை பரிசோதனை செய்தபோது 20 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

பின்னர் சந்தேகத்திற்கு இடமான இருந்த நான்கு பேரைப் பிடித்து விசாரணை செய்வதில் ஒரிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.  

   இதன் காரணமாக இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் 20 கிலோ கஞ்சாவையும் திருப்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் மத்திய நுண்ணறிவு போலீசார்  ஒப்படைத்தனர்.

   மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரின் விசாரணையில் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த முரளி மற்றும் கர்நாடக பகுதியைச் சேர்ந்த நடராஜா, முருகேஷ் மற்றும் சத்தீஸ்கர் பகுதியை சேர்ந்த சம்பாசிவம் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.