கில்லர் குணா எஸ்கேப்! ஓசி டீ கேட்ட வழக்கில் தேடப்படுகிறார்!
ஜி.கே.சேகரன்,
ஓசியில் டீ கேட்டு டீ மாஸ்டரை கத்தியால் தாக்கிய போதை ஆசாமிகள்! கத்தியை காட்டி அலப்பறை செய்த கில்லர் குணா மாயம்! நான்கு பேர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கூத்தாண்ட குப்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் (43) இவர் அதே பகுதியில் துணைத் தலைவராக உள்ளார்.
இவர் சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை கேத்தாண்டப்பட்டி சுகர் மில் அருகே கிருத்திகா ஹோட்டல் மற்றும் ஆவின் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவருடைய கடையில் வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்த இக்பால் மகன் இம்தியாஸ் (19) என்பவர் டி மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஐந்து பேர் கஞ்சா போதையில் டீக்கடைக்கு வந்து இம்தியாஸிடம் ஓசியில் டீ கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது பணம் கொடுத்தால் மட்டுமே டீ தருவேன் என இம்தியாஸ் கூறியதன் காரணமாக ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த பட்டக்கத்தியை எடுத்து இம்தியாஸை தாக்கி ரகளையில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த டீக்கடை உரிமையாளர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து டீ மாஸ்டரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து நாட்றம்பள்ளி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் இதனால் பயந்து போன மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
மேலும் இருசக்கர வாகனம் மற்றும் பட்டா கத்தியை அங்கே விட்டு சென்றனர். இதனை நாட்றம்பள்ளி போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
மேலும் நாட்றம்பள்ளி போலீசார் தீவிர வேட்டை நடத்தியதில் எட்டு மணி நேரத்தில் நான்கு பேரை கைது செய்தனர்.
அதில் திருப்பத்தூரை சேர்ந்த ஞானவேல் (22) மற்றும் கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (19) மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும் டீ மாஸ்டரை கத்தியை காட்டி மிரட்டிய முக்கிய நபரான¢ குணா என்பவர் தலைமறைவாக உள்ளார். மேலும் போலீசார் குணாவை தேடி வருகின்றனர்.

admin
