பணியின் போது மின் ஊழியர் பலி! கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து மறியல்!

பணியின் போது மின் ஊழியர் பலி! கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து மறியல்!

கு.அசோக்,

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி - இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.உயிரிழப்பு தொடர்பாக மின்சாரத்துறை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்காமல் போனதால் ஆத்திரப்படுத்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

 இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டைஅருகே உள்ள கல்மேல் குப்பம் பகுதியில் மின்சாரம் கம்பம் மற்றும் புதிய ஒயர்கள் மாற்றும் பணியானது 10 க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் நடைபெற்று வந்தது.  

   அப்பொது ஒழுகூர் பகுதியை சேர்ந்த குமரேசன், அம்மூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்த வினோத், செங்காடு பகுதியை சேர்ந்த பார்த்திபன் ஆகிய மூன்று பேர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 அப்போது மின்சார ஒயர்கள் மாற்றிக் கொண்டிருந்த கம்பத்தின் மேலே சென்று கொண்டிருந்த போது உயர் மின்னழுத்த  மின்சாரம் தாக்கியதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தனர்.

   அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக மூன்று பேரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர் இதில் சிகிச்சை பலனின்றி ஒழுகூர் பகுதியை சேர்ந்த குமரேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பாதிப்படைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  பணியின் போது மின்சார தாக்கிய விபத்தில் உயிரிழந்த குமரேசனின் உயிரிழப்பு தொடர்பாக மின்சாரத் துறையின் உயர் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்காமல் போனதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை எதிரே உள்ள வாலாஜா - காஞ்சிபுரம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

   தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜாபேட்டை காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  உயிரிழந்த குமரேசனுக்கு மூன்று மகள்கள் உள்ளதால் இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் கதறி புரண்டு அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 இந்த சம்பவம் தொடர்பாக இராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.