விட்டுக்குள் நுழைந்த வடக்கன்ஸ் மனநிலை சரியில்லாதவரா?
கு.அசோக்,
காம்பவுண்ட் சுவர் எகிறி குதித்து வட மாநில வாலிபர்கள் 3 பேர் கொள்ளை முயற்சி செய்தனர்.
இதில் ஒருவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து போலீசிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இராணிப்பேட்டை மாவட்டம், கைனூரை சேர்ந்தவர் மேகலா. இவர் தனது வீட்டின் வெளியில் நின்று அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவை திறக்கும் சத்தம் கேட்டு உள்ளே வந்தபோது காம்பவுண்ட் சுவர் வழியாக 3 வாலிபர்கள் எகிறி குதித்து உள்ளே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அவர்களை மேகலா, யார் நீங்கள் என கேட்ட போது இரு வாலிபர்கள் வந்த வழியே சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர்.
ஒருவன் உள்ளே வந்து கொண்டிருந்தான். இதில் அதிர்ச்சி அடைந்த மேகலா கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு அலறி கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கதவை திறந்து உள்ளே சென்றபோது வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தார். அப்பகுதி மக்கள் வாலிபரின் சட்டைப் பையில் சோதனையிட்டதில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோம முண்டா ( 28) என்ற ஆதார் கார்டு இருந்தது. எதற்காக வந்தீர்கள் என்று கேட்டால் அவன் எதையுமே சொல்லவில்லை.
உடனே டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சோம முண்டாவை போலீசார் இருசக்கர வாகனத்தில் உட்கார வைக்க முயன்ற போது கைகளை கடிக்க பாய்ந்தான். அதன் பின்னர் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோம முண்டாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
பட்டப் பகலில் கைனூரில் சுவர் ஏறி குதித்து 3 வட மாநில வாலிபர்கள் கொள்ளை முயற்சி செய்து அதில் ஒருவன் பொதுமக்களிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிக்கியவன் மனநலம் பாதிக்கப்பட்டவனா? என விசாரிக்கின்றனர்.

admin
