விஜய் ஸ்கிரீனுக்கு பின் இருந்து பேசுகிறார்...வெளியே வரட்டும் பார்க்கலாம்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
தவெக தலைவர் விஜய் ஸ்கிரீனுக்கு பின்னால் பேசலாம் வெளியே வந்து பேசட்டும் பார்ப்போம் - சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆனதற்கு வாழ்த்துக்கள் - நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமானது மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது இதனை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
முன்னதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீதிமன்ற தீர்ப்புப்படி நாங்கள் தண்ணீர் திறந்து விடுவோம் என கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, இதற்கு போய் என்ன, இப்போதான் எக்கச்சக்கமா தண்ணீர் தான் போய்க்கொண்டிருக்கிறதே என்றார்.
தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆனது குறித்து கேட்டதற்கு,தமிழர் என்பது மட்டும் அல்ல அவர் எனக்கு ரொம்ப நாளா வேண்டிய நண்பர். எனவே அவர் பதவிக்கு வந்திருக்கிறார் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என கேட்டதற்கு,அவர் செயல்பட்டால் தான் தெரியும் பார்க்கலாம் எப்படி இருக்கும் என்று.தமிழ்நாட்டின் நலன் சார்ந்து செயல்படுவாரா என கேட்டதற்கு. அவரால் என்ன தமிழ்நாட்டுக்கு வரப்போகுது அவர் மேல் சபையின் தலைவர் அவ்வளவுதான்.
தமிழ்நாட்டுக்கு சாதகமான கேள்வி ஏதாவது இருந்தால் கேட்க்க சொல்லுவர் அவ்வளவுதான் அவரால் முடியும்.
எம்ஜிஆர் அதிமுகவை பார்த்தவர் நீங்கள்அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து கேட்டதற்கு,அதிமுகவின் நிலை குறித்து நான் என்ன சொல்ல. அது அவர்கள் கட்சி அந்த கட்சி விவகாரத்தில் தலையிட நாம் தயாராக இல்லை.
குழப்பத்திற்கு திமுகவும் காரணம் என கூறப்படுகிறது குறித்து கேட்டதற்கு இது போன்ற அக்கப்போரை எத்தனை பேரோ சொல்லி இருக்கிறார்கள் அதெல்லாம் இன்னைக்கு புறம்தள்ளிவிட்டு போகனுமே தவிர பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை.
தாமிரபரணி ஆற்றை திமுக தலைமுழுகி விட்டதாக நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து கேட்டதற்கு, நயினார் பாவம் புது பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறார் அவர் சட்டசபையில் எப்படி செயல்படுகிறார் என எங்களுக்கு தெரியும்.
திமுக ஆட்சியை எமர்ஜென்சி என குறிப்பிட்டும் தமிழக மக்கள் அப்பா என கூப்பிட சொல்லி உள்ளீர்கள் தமிழக மக்களின் குரல் கேட்கவில்லையா என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசி இருந்தது குறித்து கேட்டதற்கு, ஸ்கிரீனுக்கு பின்னால் நின்று பேசிக் கொண்டிருக்கிறார் வெளியே வரட்டும் பார்ப்போம் என்றார்.
தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்து கேட்டதற்கு,அவர் சனிக்கிழமை வைத்தால் என்ன வெள்ளிக்கிழமை வைத்தால் நமக்கு என்ன - என காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் என்று சொன்னார்.

admin
