காதலனை ஓடவிட்டு கத்திமுனையில் கூட்டு பலாத்காரம்! இள்ம் பெண் அளித்த புகாரில் மூவர் கைது!
கு.அசோக்,
ஆண் நண்பருடன் இருந்த இளம் பெண்ணை கத்தி காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதற்காக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம், அவரக்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை தென்னம் வித்து பண்ணை அருகே கடந்த ஏழாம் தேதி இரவு 10 மணி அளவில் ஆண் நண்பருடன் இளம் பெண் இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மூன்று நபர்கள் இளம் பெண்ணின் ஆண் நண்பரை சரமாரியாக தாக்கி கத்தியை காண்பித்து மிரட்டி அவரை அங்கிருந்து ஓட செய்துள்ளனர்.
பின்னர் தனியாக பயத்துடன் நின்று இருந்த இளம் பெண்ணை கத்தி காட்டி மிரட்டி சிறிது தூரம் அடர்த்தியான பகுதிக்கு அழைத்துச் சென்ற மூன்று நபர்களும் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது உறவினர்களுடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் நேரடி உத்தரவின் மேற்பார்வையில் இராணிப்பேட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் இமயவர்மன் தலைமையில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவரக்கரை பகுதியை சேர்ந்த சிவராஜ்(23) ராஜா(22) பார்த்திபன்(24) ஆகிய மூன்று நபர்களை காவல்துறையினர் பிடித்து தனியாக வைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது மூன்று நபர்களும் இளம் பெண்ணை கத்தி காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
மேலும் இளம்பெண்ணும் குற்றவாளிகள் இவர்தான் என உறுதிப்படுத்தியதை தொடர்ந்து மூன்று நபர்களின் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
ஆண் நண்பருடன் இருந்த இளம் பெண்ணை கத்தி காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு மூன்று நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதலர்கள் கூடுமானவரை தனிமையான இடங்களில் சந்தித்து பேசுவதை தவிர்ப்பது நல்லது என்று அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்.

admin
