பெண்களின் முன்னேற்றத்திற்கு மத்திய மாநில அரசுகள் பல வழிவகை செய்கிறது!ஆட்சியர் சந்திரகலா பேச்சு!

பெண்களின் முன்னேற்றத்திற்கு மத்திய மாநில அரசுகள் பல வழிவகை செய்கிறது!ஆட்சியர் சந்திரகலா பேச்சு!

கு.அசோக், 

மத்திய மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது இதனை பயன்படுத்தி பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா தெரிவித்தார்.

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருட்களின் மூன்றுநாள் விற்பனை கண்காட்சி கல்லூரி சந்தை  நிகழ்ச்சி நடைபெற்றது.

  மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்து மகளிர் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஒவ்வொரு பொருட்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

  தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்றைய சமுதாயத்தில் ஏழை பெண்மணிகளை தேர்ந்தெடுத்து ஒன்று சேர்த்து மகளிர் குழுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

  அதன் மூலம் சேமிப்பு கணக்கை ஏற்படுத்தி அவர்களுக்கு வங்கி மூலம் கடன் வழங்கி பொருட்கள் உற்பத்தி செய்து இதுபோன்று சந்தைப்படுத்தி விற்பனை செய்யும் போது  ஏழை மக்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது.

   அதேபோல் கல்லூரி படிக்கும்போதே மாணவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை செய்வதால் பெண்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது.

  தற்போது உள்ள சூழலில் ஆன்லைன் விற்பனையும் அதிகரித்து உள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பல வழிவகை செய்கிறது எனவே இதனை பயன்படுத்திக்கொண்டு பெண்கள் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

   இந்த நிகழ்ச்சியில், மகளிர் குழுவினர், என பலர் கலந்துக் கொண்டனர்.