கலெக்டர் நடத்திய போதைப்பொருட்களுக்கு எதிரான நிகழ்ச்சி!

கலெக்டர் நடத்திய போதைப்பொருட்களுக்கு எதிரான நிகழ்ச்சி!

கு.அசோக்,

  போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திரளான மாணவர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர் - போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழியும் எடுத்துகொண்டனர்

  வேலூர்மாவட்டம், வேலூரில் தமிழ்நாடு காவல்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை சார்பில்   போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 அந்த வகையில், காந்தி சிலை அருகில் இருந்து இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை வேலூர் மாவட்ட  ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

  இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் பயிற்சி பெறும் பெண் காவலர்களும்  இதில் கலந்துகொண்டனர்.  போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று   விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

  போதை பொருள் மனித குலத்திற்கு தீமையை ஏற்படுத்தும் குறிப்பாக இளைஞர்கள் போதைக்கு எதிராக செயல்பட வேண்டும்.

  போதையால்   உடல் நலமும் மன நலமும் பாதிக்கபடுவதால் மக்கள் இதனை புறக்கணிக்க வேண்டும்  போதையில்லா சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று காவல்துறை ஆயுத படை மைதானத்தில் நிறைவடைந்தது.

    இந்த   ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர் போதை பொருட்களுக்கு எதிராக அனைவரும் உறுதிமொழியும் ஏற்றுகொண்டனர்