அசம்பாவிதம் தவிர்ப்பு!

அசம்பாவிதம் தவிர்ப்பு!

ஜி.கே.சேகரன்,

   ரயில்வே மேம்பாலம் அருகே திடீர் தீ விபத்தால் எரிந்து நாசமான மூதாட்டியின் குடிசை வீடு, இராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு .

 இராணிப்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே ஐந்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓலை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்த கண்ணன் என்பவரின் மனைவி லஷ்மி தனது வீட்டை பூட்டி விட்டு அருகே கடைக்கு சென்றுள்ளார்.

  இந்த நிலையில் திடீரென லட்சுமியின் ஓலை வீடு தீப்பற்றி எரிந்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவி கடுமையான புகை மூட்டத்துடன் எரிந்தது.

  இதனால் மேம்பாலத்தில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மேம்பாலத்தில் இருந்தவாறு தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

  சம்பவ இடத்தில் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் நேரில் பார்வைக்கு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தீ விபத்தால் பாதிக்கப்பட்ட லட்சுமிக்கு அரசின் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வட்டாட்சியர் ஆனந்தன் உத்தரவிட்டார்.