மக்களைப்பற்றி கவலைபடாமல் மதத்திற்காக கவலைப்படுகின்றனர்! சி.எம்.பேச்சு! திருப்பத்தூருக்கு 5 முக்கிய அறிவிப்புகள்!

ஜி.கே.சேகரன்,
மக்களைப்பற்றி கவலைபடாமல் மதத்திற்காக கவலைப்படுகின்றனர், அண்ணா பெயரில் கட்சி நடத்துபவர்கள் கட்சியை அடமானம் வைத்தது போல் தமிழ்நாட்டையும் பிஜேபியிடம் அடமானம் வைத்துவிட கூடாது, தற்போது பாஜக கூட்டணியில் உள்ளவர்களுக்கு தான் ஆபத்து தமிழ்நாட்டில் மதவாத அரசியல் செய்ய சதிவேலை நடக்கிறது திருப்பத்தூரில் நடைப்பெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் பல்வேறு துறையின் சார்பில் 517 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 174 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,273 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கினார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நான் வரும் பொழுது சாலையின் இருமுனையிலும் கூட்டம் பொதுமக்கள் இளைஞர்கள், விவசாயிகள் தந்த வரவேற்பு இதை பார்க்கும் போது பெருமிதம் கொள்கிறேன். 2026, 2031, 2036 ஆண்டுகளை நான் தான் ஆளுவேன்.
ஆட்சியரும், அரசு அதிகாரிகளும் சிறப்பான முறையில், செயல்பட்டு வருகின்றனர். இன்று நாம் பெருமையோடு மகிழ்ச்சியோடும் இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாத கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிந்த தமிழ்நாட்டின் வளர்ச்சியை நமது திராவிட மாடல அரசு இந்த நான்கு ஆண்டுகளில் மீட்டு எடுத்து வருகிறது வரலாறு காணாத வளர்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கின்றோம்.
இதை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக சொல்வேன் சொல்கிறேன் என்று கருத வேண்டாம் தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்கின்ற ஒன்றிய அரசு கூட நம்முடைய வளர்ச்சியை மறைக்க முடியவில்லை.
அதனால் தான் ஒன்றிய அரசே தமிழ்நாடு ஒன்பது புள்ளி 6 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவின் மற்ற மற்ற மாநிலங்களை விட பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.
மேலும் பேசிய அவர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், திருப்பத்தூர் மாவட்டத்திற்கான 5 அறிவிப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வெளியிட்டார்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 26, 2025
1/2 pic.twitter.com/7GFlbQK5mF
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கக்கூடிய நெக்னாமலை பகுதியில் வாழும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும், பொதுமக்கள் மருத்துவ வசதிகளை பெறவும், வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யவும் 30 கோடி ரூபாய் செலவில், ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கப்படும்.
குமாரமங்கலம் பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகத்தை உறுதிசெய்கின்ற வகையில், அந்தப் பகுதியில் ஆறு கோடி ரூபாய் செலவில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும்.
நல்லகுண்டா பகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்காவை ஒட்டி, 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில், 250 ஏக்கர் பரப்பளவில், 200 கோடி ரூபாய் செலவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
திருப்பத்தூர் நகரத்தின் மையப்பகுதியில், பழைய பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில், 18 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும்.
ஆம்பூர் நகர மக்கள் பயன்பெறும் வகையில், ஒரு கோடி ரூபாய் செலவில், புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும்.
அறிவிப்புகளை மட்டும் செய்வதில்லை அதனை விரைந்து செயல்படுத்தி அதனை ஆய்வு செய்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
பொதுமக்களுக்கு வீடு கட்டும் பணியை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் ஒன்றிய அரசு வீடு கட்டும் திட்டம் ஒன்று உள்ளது ஒரு வீடு கட்டுவதற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் அளிக்கிறார்கள் அதில் 60 விழுக்காடு ஒன்றிய அரசு 40 விழுக்காடு மாநில அரசு தர வேண்டும்.
ஒரு லட்சத்து 20 ஆயிரத்தில் வீடு கட்ட முடியுமா 72 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒன்றிய அரசு தருகிறது மீதி கூடுதலாக மாநில அரசு ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் அளிக்கிறது.
பேருதான் அவர்களுடையது நிதி நம்முடையது, மாப்பிள்ளை அவர்தான் அவர் போட்டுள்ள சட்டை என்னுடையது என இப்படித்தான் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை ஒழுங்காக தருவதில்லை தந்தாலும் அரைகுறை தான்.
இந்த நிலையில் ஒன்றியத்தில் இருப்பவர்களுடன் தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து சாதியாலும் மதத்தாலும் தொடர்ந்து பிளவு படுத்த முயற்சி செய்து வருகிறார்கள் அவர்களால் முடியாத போது இங்கிருக்கும் அதிமுகவினரையும் சேர்த்துக் கொள்கிறார்கள் நாட்டில் இருக்கும் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்க வேலைவாய்ப்பு இல்லை என்று சொன்னால் பிஜேபியும் அதிமுகவும் மக்களைப் பற்றி கவலைப்படாமல் மதத்திற்காக கவலைப்படுகிறார்கள்.
இதுதான் அவர்களுடைய அரசியல், தமிழ்நாட்டில் மதத்திற்கு ஆபத்து என அதிமுகவினர் வைத்துக்கொண்டு பாஜகினர் பேசுகிறார்கள்.
உண்மையில் சொன்னால் தமிழ்நாட்டில் பாஜகவின் கூட்டணிக்கு தான் இப்பொழுது ஆபத்து மிஸ்டு கால் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள் கட்சி வளர்க்க முடியாமல் போனது தன்னுடைய அரசியல் லாபத்திற்காக கடவுள் பெயரை மிஸ் யூஸ் செய்கிறார்கள்.
இவர்களுடைய போலி பக்தி அரசியல் யாரும் ஏற்க மாட்டார்கள் இது தமிழ்நாடு தந்தை பெரியார் உருவாக்கிய மண் அண்ணா வளர்த்த மண் கலைஞர் மீட்டெடுத்த மண் தமிழ்நாடு அனைத்து மதத்தினருக்கும் தங்கள் உரிமையோடும் பிற மதத்தினருக்கு நல்லொழுக்கத்தோடும் வாழ்கின்ற மண் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் தமிழ்நாடு 3000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம்.
அதேபோல் 84 கோடி மதிப்பில் தேவாலங்களையும் மசூதிகளையும் புரணமித்துள்ளோம் இதுதான் திராவிட மாடல் இதையெல்லாம் பார்த்துதான் மதவாத அரசியல் செய்பவர்களுக்கு பத்தி எரிகிறது அவர்களால் தமிழ்நாட்டு தமிழ்நாட்டிற்கு செய்த வளர்ச்சிகளை பற்றி பேச முடியவில்லை ஓட்டு கேட்க முடியவில்லை முடியாது.
நல்லது செய்திருந்தால் தான் சொல்ல முடியும், மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால் அங்கேயும் திமுக ஸ்கோர் பண்ணிட்டாங்க என்று கவலையில் இருக்கிறார்கள் ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்த படாத பாடு படுகிறார்கள்.
அவர்களுக்கு நான் மீண்டும் சொல்லிக் கொள்வது இந்த மண் பெரியார் பன்படுத்திக் கொண்டிருக்கின்ற மண் அறிஞர் அண்ணாவால் மேம்படுத்தக்கூடிய மண் இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள்.
அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது அண்ணா பெயரில் கட்சி வைத்துள்ள கூட்டம். அண்ணா பேரையே அடமானம் வைத்தார்கள் இன்னிக்கு கட்சியை அடமானம் வைத்தவர்கள் நாளைக்கு தமிழ்நாட்டை அடமானம் வைக்க அனுமதிக்க கூடாது.
தமிழ்நாடு தன்மானம் உள்ள தமிழ்நாட்டு மக்களும் இந்த மண்ணுக்கு சதி வேலைகளை நோக்கத்தை புரிந்து தமிழினத்திற்கும் எதிரானவளுக்கும் துரோகிகளுக்கும் ஒரு சிறப்பான பாடத்தை புகட்ட வேண்டும் உங்களுக்கு அரணாக என்றைக்கும் திமுக இருக்கும் அதேபோல் நீங்களும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்திரவல்லி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர். காந்தி, மா.சுப்பிரமணியம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், சி.என். அண்ணாதுரை, கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ் நல்லதம்பி, வில்வநாதன், அமுலு விஜயன், செந்தில்குமார், வாணியம்பாடி நகரமன்ற தலைவர் உமாபாய் சிவாஜிகணேசன், கவுன்சிலர் எஸ்.சாரதி மற்றும் திருப்பத்தூர் டி.கே.மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.