திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 112 கோடி ஊழல்!250 பக்கம் ஆதாரம் சமர்ப்பிப்பு!

ஜி.கே.சேகரன்,
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 112 கோடி ஊழல் புகாரை அடுத்து உயர்கல்வித்துறை குழு அமைத்து இன்று விசாரணை-தேர்வு முறைகேடுகள் உள்ளதாக இதே நாளில்நான்கு மாவட்ட மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் பரபரப்பு.
வேலூர் மாவட்டம் சோக்காட்டில் தமிழக அரசுக்கு சொந்தமான திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் வேலூ£,¢ ராணிப்பேட்டை, திருப்பத்தூ£,¢ திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஆசிரியர்கள் நியமனம் தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதில் முறைகேடு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் எழுந்தது. இதில் பேராசிரியர் இளங்கோ என்பவர் புகாரை சென்னை உயர்நீதிமன்றம் வரை கொண்டு சென்றார்.
பின்னர், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஒரு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
மலர்விழி என்பவர் தலைமையில் குழு விசாரணை நடத்தி மூன்று மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. ஆனால் அவர் விசாரணை நடத்தவே இல்லை.
இந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தை நாடியதால் தமிழக உயர்கல்வித்துறை ஹென்றி லாசர் என்பவர் தலைமையில் விசாரணை குழு ஒன்றை அமைத்தது அந்த குழு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டது.
குறிப்பாக, புகார்தாரரான முன்னாள் ஆட்சி மன்ற குழு உறுப்பினரும் பேராசிரியருமான திருவள்ளுவர் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவருமான பேராசிரியர் இளங்கோவிடம் விசாரணை செய்தனா.¢ இதில் 112 கோடி நடந்ததற்கான 250 பக்கம் ஆதாரங்களை அளித்துள்ளார்.
இந்த நிலையில் இப்ப பல்கலைக்கழகத்தில் தேர்வு தேர்வு எழுதியவர்களுக்கு சரியான மதிப்பெண் வழங்கவில்லை தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பல்கலைக்கழக முறைகேடுகள் கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள் இதனால் பரபரப்பு காணப்பட்டது. இந்த புகார்கள் குறித்து ஒரே நாளில் இரண்டு இடங்களில் போராட்டங்களும் விசாரணையும் நடைபெற்றதால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தொடர்பு கொண்டு கேட்க முயன்ற போது அவர் கூட்டத்தில் உள்ளதாகவும் கூறி செய்தியாளர்களை திருப்பி அனுப்பினர்.