ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாமியார்-மருமகள் மோதல்!!
முரளிதரன்,
ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பிடிக்க ஒரே தொகுதியில் மாமியாரும் மருமகளும் களம் காண்ட்கிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி.
தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், மேற்படி ஊத்துக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சாவித்திரி மணிகண்டன் என்பவர் போட்டியிட வேட்மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் அவரை எதிர்த்து அவரது மாமியார் ஜெயலட்சுமி லோகநாதன் என்பவர் மனு தாக்கல் செய்து அதிரிச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
ஒரே ஊராட்சியில், மாமியாரும், மருமகளும் வேட்புமனு தாக்கல் செய்ய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டுல தான் மோதல் என்றால் தேர்தலிலுமா என்று மக்கள் கிண்டலடிக்கிறார்கள்.
இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் தலைவர் பதவி அவர்கள் குடும்பத்துக்குத்தானே செல்லும்.

admin
