விஐடி மாணவர் மரணம்! கொலையா? தற்கொலையா? காட்பாடி போலீசார் தீவிர விசாரணை!

  விஐடி மாணவர் மரணம்! கொலையா? தற்கொலையா? காட்பாடி போலீசார் தீவிர விசாரணை!

D.Nelson,

 வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் விஐடி என்கிற பெயரில் தனியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.

 இதில் சென்னை தாம்பரம் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த விஷ்வ மோகன் ராத் என்பவரின் மகன் இஷாந்ராத் வயது 20 என்பவர் (பி.இ, இ.சி.இ) படிப்பு படித்து வந்தார்.

  இந்நிலையில் அவர் கடந்த (17:07: 2025) ஆம் தேதி இரவு 10:00 மணியளவில் எம் பிளாக் 11வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

 அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

 உடனே காட்பாடி டிஎஸ்பி பழனி, உத்தரவின் பேரில் வட்ட காவல் ஆய்வாளர் தயாளன், உதவி ஆய்வாளர் மணிகண்டன், மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு வேலூர் தனியார் சி எம் சி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

   அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் (18:07:2025) ஆம் தேதி

அதிகாலை 3:00 மணி அளவில் சிகிச்சையிருந்த இஷாந்ராத் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

    விஸ்வா மோகன்ராத்,  காட்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து   தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மாடியில் இருந்து யாராவது தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டாரா என்று விசாரணை மேற்கொண்டனர்.

   இது குறித்து போலீஸ்தரப்பில் இது தற்கொலைதான் என்றூ எடுத்த எடுப்பிலேயே சொல்லி வழக்கம் போலவே மூடி மறைக்க முயன்றனர்.

  ஊடகவியலாளர்கள் தரப்பில் மாணவணின் உறவினர்களிடம் பேசுகையில், போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வருவதற்கு முன் போலீசார் இதை தற்கொலை என்று எப்படி சொல்லலாம் என்று கொதித்தார்கள்.

 காட்பாடியை பொறுத்தவரை பல ஆண்டுகளாக இப்படித்தான் நடந்து வருகிறது என்பது தனிக்கதை.