ஆசிரியரை பணி மாறுதல் செய்யக்கூடாது அரசு பேருந்து சிறை பிடிப்பு!
கு.அசோக்,
ஆசிரியரை பணி மாறுதல் செய்யக்கூடாது எனக் கூறி பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம். மேலும் அவ்வழியாக வந்த அரசு பேருந்து சிறை பிடிப்பு.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட பழைய பாளையம் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குமார் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அதே ஒன்றியத்திற்குட்பட்ட செங்கல் நத்தம் என்ற பகுதியில் இயங்கி வரும் பள்ளி ஒன்றுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த பழைய பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர் குமாரை பணியிட மாறுதல் செய்யக்கூடாது எனக் கூறி காலை முதலே வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவ்வழியாக வந்த சோளிங்கர் அரக்கோணம் தடம் எண் 46 அரசு பேருந்தை மடக்கி வழி விடாமல் சிறை பிடித்தனர். இந்த மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்களது பெற்றோர்களும் ஊர் மக்களும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அங்கு கூடினர்.
நீண்ட நேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் தொடர்ந்து போராட்டம் ஆனது நடைபெற்றது. இந்தத் தொடர் போராட்டத்தை எடுத்து ஆசிரியர் குமார் பணியிட மாறுதல் ரத்து செய்யப்படுமா, அல்லது பணியிட மாறுதல் செய்யப்படுவாரா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

admin
