காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திவெட்டு!
கு.அசோக்,
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டிவிட்டு இளைஞர் தப்பி ஓட்டம், காவல்துறையினர் விசாரணை மாணவி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மேல்நேத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயவேல். இவரது மகள் கிருத்திகா இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு கல்லூரி வாகனத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்ற போது வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து மற்றும் கை பகுதிகளில் வெட்டி விட்டு பைக் மூலம் வேகமாக பறந்து உள்ளார்.
பலத்த காயம் அடைந்த மாணவி கிருத்திகா அங்கிருந்தவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர் அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மாணவியிடம் கலவை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் என்னை வெட்டியது அகரம் கிராமத்தைச் சேர்ந்த கவியரசு (21) என தெரிவித்துள்ளார்.
மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கல்லூரி மாணவி கவியரசுவை காதலிக்க மறுத்ததின் காரணமாக கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டப்பட்டு உள்ளார் இதுகுறித்து கலவை போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை வெட்டிவிட்டு தலைமறைவான கவியரசுவை தேடி வருகின்றனர்

admin
