இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

 கு.அசோக்,

வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின் இயக்கம் சார்பில் ஆர்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் விஜயன் தலைமையில் நடைபெற்ற  இதனை திருப்பத்தூர்மாவட்டத்தலைவர் மதியாழகன் துவங்கி வைத்தார் 

  இதில் மாநில துணை தலைவர் ஞானசேகரன் ராணிப்பேட்டை மாவட்டத்தலைவர் துரை உள்ளிட்ட நிர்வாகிகளும் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் இதில் கலந்துகொண்டனர். 

   2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடை நிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 15 ஆண்டுகாலமாகிறது எனவே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம் உண்ணாவிரத்திலும் ஈடுபட்டனர். 

 இதில் திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டு திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும் இல்லையென்றால் செப்டம்பர் மாதம் சிறை நிரப்பும் போராட்டம் செய்வதாகவும் அறிவித்தனர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள்