தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை எதிர்த்து புரட்சி உருவாகும்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
வேலூரில் ரூ.3.43 கோடி மதிப்பில் 7 புதிய குளிரூட்டப்பட்ட அரசு புதிய பேருந்து வழிதடங்கள் துவக்கம் - தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை எதிர்த்து ஒரு புரட்சி எழுச்சி உருவாகும் அமைச்சர் துரைமுருகன் வேலூரில் பேட்டி ஒன்றில் சொன்னார்.
வேலூர்மாவட்டம்,வேலூரில் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் ரூ.3.43 கோடி மதிப்பிலான 7 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
அப்போது, அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் பெரிய பேருந்துகள் விடுவது வரவேற்கதக்கது ஆனால் சின்ன சின்ன கிராமங்களுக்கு செல்ல மினி பேருந்துகளை மாவட்ட நிர்வாகம் இயக்க முன் வரவேண்டும் என்றார்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பீகாரில் 60 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்டது பலர் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலை திருத்த கூடாது அதனை எதிர்த்து எங்கள் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியல் சீர் திருத்தம் செய்தால் மிகப்பெரிய ஒரு புரட்சி எழுச்சி நாடு தழுவிய அளவில் உருவாகும்.
போலி வாக்காளர்கள் சேர்ப்பு என்பது உண்மை தான். இவர்கள் சேர்த்துவிட்டு போனது தான் ஆகையால் யார் எதுவாக இருந்தாலும் இந்த நிலைமை கூடாது. கங்கை கொண்ட சோழபுரம் தண்ணீர் கடல் போல் உள்ளது. தூர்வாருவது என்பது நல்ல விஷயம் பாராட்டுக்குரியது. ஆனால் தண்ணீர் அதிக அளவில் உள்ளதால் தற்போது தூர்வார முடியாது என சொன்னார்.

admin
