தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம்! நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.நோட்டிஸ்!

உ.சசிக்குமார்,
நாடாளுமன்ற அலுவல் பணிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு, தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி.யான டி.ஆர். பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அந்த நோட்டீஸில் ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் செயல்படுவதாக டி.ஆர். பாலு அதில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதை ஏற்றுள்ள சபாநாயகர், விவாதம் நடத்துவதற்கான நேரம் தெரிவிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கிடையே இது குறித்து விவாதிக்க அனுமதிப்பாரா என்பது பின்னர் தான் தெரிய வரும்.
கருப்பு சட்டை.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பிரச்சினையில் விவாதத்தை அனுமதிக்காதது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதத்தை தொடங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) கருப்பு உடை அணிந்து கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.