மாணவிகளை ஏற்றாத அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்! போலீசை கலாய்த்தனர்!

மாணவிகளை ஏற்றாத அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்! போலீசை கலாய்த்தனர்!

 ஜி.குலசேகரன்,

 நாட்றம்பள்ளி அருகே உணவு வேலையில் அரசு பேருந்தில் கல்லூரி மாணவிகள் பொதுமக்களை ஏற அனுமதிக்காத ஓட்டுநா மற்றும்¢ நடத்துனரால் பரப்பரப்பு ஏற்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதிக்கு அரசு பேருந்து அச்சமங்கலம், புதுப்பேட்டை வழியாக வெலக்கல்நத்தம் வந்து பொம்மிகுப்பம் வரை செல்கின்றது. இந்த அரசு பேருந்தில் நாள்தோறும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள மகளிர் அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மதிய வேளையில் கல்லூரி பேருந்தில் பயணம் மேற்கொள்கின்றனர்.

  நாள்தோறும் மாணவிகள் பேருந்திற்காக  காத்திருக்கும் போது உணவு இடைவேளை என்று  கூறி பேருந்தின் நடைபாதை கதவை மூடிவிட்டு பேருந்தில் யாரையும் ஏற்றாமல் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என இருவர் மட்டும்   பேருந்தில் அமர்ந்து உணவு சாப்பிடுவதாக கூறப்படுகிறது.

  அதன்பின்னர் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களை பேருந்தில் அமர அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது மேலும் நாள்தோறும் இதுபோன்ற செயலில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஈடுபட்டு வருபவதாகவும் இவர்கள் மீது போக்குவரத்து துறை கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  இந்த பிரச்சனை நடந்துக் கொண்டிருந்த போது ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் இது தொடர்பாக கேட்ட போது, பேருந்து ஓட்டுனர் நாங்கள் உணவு உண்ணும் வரை யாரும் ஏறி சீட்டில் அமரக்கூடாது என்று  காவல் அதிகாரியை ஒருமையில் பேசி அனுப்பிவைத்தார்.