ஊழல் பணமும்... கொடைக்கானலில் பங்களாவும்! அரசு அதிகாரி பற்றி விசாரிகனுமே?!

  ஊழல் பணமும்... கொடைக்கானலில் பங்களாவும்! அரசு அதிகாரி பற்றி விசாரிகனுமே?!

அ.கார்த்தீஸ்வரன்,

 அரியலூர் மாவட்டத்தில் 210 பஞ்சாயத்துகளுக்கு வெண்டிலேட்டர்கள் வாங்கியதிலும், மின்சாரத்தில் இயங்கும் 240 குப்பை வாங்கியதில் வண்டிகள் முறைகேடு நடந்திருப்பதாக, அரியலூர் ஆட்சியரக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 குறிப்பாக 210 பஞ்சாயத்துக்களுக்கும் வெண்டிலேட்டர்கள் தலா ரூ 50,000 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் கிட்டத்தட்ட 50 லட்சத்தை அரியலூர் உதவி இயக்குனர் பழனிச்சாமி சுருட்டி விட்டார் என்று பேசப்பட்டு வருகிறது.

  மேலும் மின்சாரத்தில் இயங்கும் குப்பை வண்டிகள் 240 வாங்கியதில் ஒரு குப்பை வண்டியின் நிர்ணய விலை ரூ. 1,80,000 என்று இருக்கும் போது,உதவி இயக்குனர் பழனிச்சாமி அவர்கள் ரூ. 2,80,000 என்று பில் போட்டு சில கோடிகளை பார்த்து விட்டதாகவும் பேசப்பட்டு வருகிறது.

  பெரம்பலூரில் செயல்பட்டு வரும் சாமி எலக்ட்ரிக்கல்சில் இவர் ரூபாய் 20 லட்சம் வாங்கியுள்ளதாகவும், அதை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை எனவும் தெரிய வருகிறது. பஞ்சாயத்துகளுக்கு தேவைப்படும் பிளம்பிங் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் இங்கிருந்து தான் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

  ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க தலைவர் ஜாகிர் உசேன் பிடிஓ அவர்களிடம் ரூ. 12,00,000 அரியலூர் உதவி இயக்குனர் பழனிச்சாமி ஜிபே நம்பரில் வாங்கி உள்ளதாகவும், அதனையும் திருப்பிக் கொடுக்கவில்லை எனவும்,

அதற்காக ஜாகிர் உசேன் பிடிஓ தலைமையில் சில போராட்டங்களை முன்னெடுக்கப்பட்டது.

 இந்நிலையில், இது குறித்து அரியலூர் ஏடிபழனிச்சாமி அவர்களை தொடர்பு கொண்ட பொழுது, இது எதுவும் உண்மை இல்லை எனவும், குப்பை வண்டிகள் கொள்முதல் செய்வது என்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்டதில்லை எனவும் கூறி வருகிறார்.

மேலும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதியதாக எஸ்டேட் வாங்கி உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியரக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

 மக்களின் வரிப்பணத்தில், அதிகாரம் உள்ளோர் இதுபோன்று வரம்பு மீறி லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடும் அதிகாரிகளை களையெடுப்பதில், லஞ்ச ஒழிப்புத் துறையும் சம்பந்தப்பட்ட துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கூற்றாக உள்ளது.

   5 ஆயிரம்  லஞ்சம் வாங்கிய பொறுப்பு மேலாளர் கைது!

கு.அசோக்,

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் நகராட்சி கணக்காளர் தேவராஜ் என்பவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்.