அமைச்சரின் மனைவி நில அபகரிப்பு வழக்கில் ....பரபரப்பு தீர்ப்பு!
ம.பா.கெஜராஜ்,
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டையில் விக்டோரியா ஜூப்ளி என்கிற பெயரில் கிளப் செயல்பட்டுவருகிறது. இந்த கிளப்புக்கு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.சந்திர சேகரன் உள்ளார்.
இந்நிலையில் அவர் மாவட்ட நீதிமன்றத்தில் அமைச்சர் ஆர்.காந்தியின் மனைவி கமலா காந்தி அவர்கள் தொடர்புடைய ஒரு வழக்கு தொடுத்திருந்தார். ரூ.20 கோடி மதிப்பிலான சொத்த்தின் பட்டாவை மாற்றம் செய்து ஆட்டையை போட்டுவிட்டார் என்கிற அந்த வழக்கில் தற்போது பரபரப்பான தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த வழக்கின் விவரம் வருமாறு,
இராணிப்பேட்டையில், கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தியின் மனைவியான கமலா காந்தி. 'விஸ்வாஸ்' என்ற பெயரில், குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியை நடத்திவருகிறார். இந்த இடம் விக்டோரியா ஜூபிலி கிளப்புக்கு சொந்தமானது ஆகும்.
இந்த இடத்தில் '17,536 சதுர அடி பரப்பில் நில உரிமைதாரரிடம் எவ்வித முன் அனுமதியையும் பெறாமல், 2017-ம் ஆண்டு அந்த இடத்தில் கட்டுமானத்தை மேற்கொண்டதாக' கமலா காந்தி மீது புகார்கள் கூறப்பட்டது.
இந்நிலையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், 2018-ம் ஆண்டே விக்டோரியா ஜூபிலி கிளப் சார்பாக அதன் தலைவரும், அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சந்திரசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில், கடந்த நவம்பர் 25-ம் தேதி, நீதிபதி ஏ.பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார்.
அதில் வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடம் விக்டோரியா ஜூபிலி கிளப்புக்கு சொந்தமானதுதான்,என்றும் எனவே கிளப் தரப்பினர் வருவாய்துறையினரை அனுகி பட்டா மாற்றம் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது.
"விக்டோரியா ஜூபிலி கிளப்"
"விக்டோரியா ஜூபிலி கிளப் என்பது ஒரு தொண்டு அமைப்பு. 5.98 ஏக்கர் நிலத்தில் 10-3-1958 அன்றே இந்த நிலத்துக்கான 'ஜமாபந்தி சிட்டா' பெறப்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து, 1-8-1974 அன்று விக்டோரியா ஜூபிலி கிளப் பெயரிலேயே அன்று இருந்த இராணிப்பேட்டை தாசில்தாரால் 'பட்டா' பாஸ் புத்தகமும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சொத்தின் மீது கிளப் சார்பாகப் பல்வேறு பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டுவந்தன.
இந்த நிலையில், பெண்களுக்கும் அதிகாரமளிப்பதற்காக 1954-ல் 'ராணிப்பேட்டை லேடீஸ் கிளப்' நிறுவப்பட்டது. விக்டோரியா ஜூபிலி கிளப் உறுப்பினர்களின் மனைவிகள் பலரே லேடீஸ் கிளப்பில் சேர்ந்திருந்தார்கள்.
அவர்களுக்காக 5.98 ஏக்கரிலிருந்து 17,536 சதுர அடி (40 சென்ட்) நிலம் 25 வருடக் குத்தகை ந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது.
பின்னர் லேடீஸ் கிளப்புக்குத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட கௌரி மற்றும் செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கமலா காந்திக்கு உடந்தையாகச் செயல்பட்டு, ரூ.20 கோடி மதிப்பிலான கிளப் நிலத்தை. 'விஸ்வாஸ்' அறக்கட்டளைக்கு 90 வருடங்களுக்கு 'உள் வாடகைக் குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள்.
இதையறிந்து, 'லேடீஸ் கிளப்புடனான குத்தகையை முடித்துக்கொள்வதாக விக்டோரியா ஜூபிலி கிளப் தலைவா எம்.எஸ்.சந்திரசேகரன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் அந்த 'சொத்து தங்களுக்குச் சொந்தமானது' என்று லேடீஸ் கிளப் தரப்பிலிருந்து பதில் வந்ததால், நீதிமன்றத்தில் வழக்கு விவகாரம் நீதிமன்ற படிகட்டுகளை தொட்டு இன்றைக்கு தில்லாலங்கடி சமாச்சாரம் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.

admin
