என்ன ஆனது 37 கோடி நிதி!
ஜி.குலசேகரன்,
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி கூட்டத்தில் வாக்குவாதம் சலசலப்பு அதிமுக கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். 90 லட்சம் பணிகளுக்கு கவுன்சிலர்களிடம் ஒப்பந்தம் பெறாமல் டெண்டர் வைக்கப்பட்டதாகவும் மேலும் வரவு செலவு கணக்கு உள்ளிட்டவைகளும் முறையாக கவுன்சிலர்களுக்கு கொடுப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தலைவர் உட்பட 8 திமுக கவுன்சிலர்களும், 7 அதிமுக கவுன்சிலர்களும் உள்ளனர்.
இந்தப் பேரூராட்சியில் சாதாரண கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற தலைவர் பூசாராணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியவுடன் பேரூராட்சி அலுவலக செயலர், மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை ஒவ்வொன்றாக வாசித்தார்.
அப்போது டெண்டர் விடுவது குறித்த தீர்மானங்களை வாசிக்கும் போது 1 வது வார்டு அதிமுக பேரூராட்சி கவுன்சிலர் சரவணன் என்பவர் எழுந்து நின்று தற்போது நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களுக்கு டெண்டர் விடும்போது ஏன் கவுன்சிலர்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் தற்போது கழிவுநீர் கால்வாய், சின்டெக்ஸ் உள்ளிட்ட ரூபாய் 90 லட்சம் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டதை ஏன் எங்களுக்கு கடிதம் வழங்கவில்லை, எங்களிடம் முன் அனுமதி பெறவில்லை என்றும் பேசினார்.
இதனைத் தொடர்ந்து 11 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சரவணன் என்பவர் எழுந்து நின்று ஏற்கனவே இதுபோன்று டெண்டர்கள் விடும்போது பேரூராட்சி மன்ற கவுன்சிலர்களுக்கு தகவல் அளிப்பது கடிதங்கள் வழங்குவது உள்ளிட்டவை நடைமுறையில் இருந்தது.
இந்த கூட்டத்தில் மட்டும் ஏன் டெண்டர் விடுவது குறித்து பேரூராட்சி மன்ற கவுன்சிலர்களுக்கு கடிதம் கொடுக்கவில்லை எந்த தகவலும் அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதை தொடர்ந்து 15-வது வார்டு அதிமுக கவுன்சிலர் சுகன்யா சரவணன் எழுந்து நின்று தொடர்ந்து இந்த பேரூராட்சி மன்ற கூட்டத்தில் வரவு செலவு கணக்குகளை காண்பிக்கும்படி பலமுறை கேட்டு வருகிறோம் இதுவரை ஏன் வரவு செலவு கணக்குகளை காண்பிப்பதில்லை.
இதுவரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு 37 கோடி நிதி வந்துள்ளது ஆனால் எனது 15 வது வார்டு பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் வாக்குவாதம் மற்றும் சலசலப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து அதிமுக பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

admin
