ஒரே நாளில் மூன்று யானைகள் மர்ம பலி! கடத்தல் கும்பல் கைவரிசையா?

ஒரே நாளில் மூன்று யானைகள் மர்ம பலி! கடத்தல் கும்பல் கைவரிசையா?

கு.அசோக்,

ஒரே நாளில் மூன்று யானைகள் ஒரே இடத்தில் மர்மமான முறையில் உயிரிழப்பு தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநில வனத்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள்.

   வேலூர்மாவட்டம்,பேர்ணாம்பட்டு அருகே சாத்கர்  மலையில் ஒரே நாளில் மூன்று யானைகள் பலியானது. ஒரு யானை தண்ணீரிலும் மற்றும் இரண்டு யானைகள் அல்  ஏரிக்கு மேல் கரைபகுதியிலும் இறந்து கிடந்தது. இந்த பகுதி  தனியாருக்கு சொந்தமான மலைபகுதி ஆகும்.

  ஒரே நாளில்  மூன்று யானைகள் இறந்து கிடந்தது  இதுகுறித்து  சாத்கர் மலைகிராமத்தில்   ஆடு மேய்க்கும் மக்கள் பார்த்துவிட்டு வனசரகருக்கு தகவல் தெரிவித்தனர்.

  அதனை அடுத்து தமிழக வனத்துறையினர் 60 பேர் அடங்கிய குழுவினர் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் மற்றும் ஆந்திராவிலிருந்து வன அலுவலர் பலமநேரை சேர்ந்த வேனுகோபால்,ரேஞ்சர் நாராயணன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழுவினர் மூன்று யானைகள் இறந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

   கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 6 யானைகள் மர்மமான முறையில் இறந்துவிட்டது.  மேலும் வனப்பகுதியில் வனத்துறையினர் சரியாக கண்காணிக்காத காரணமே யானைகள் மர்ம சாவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 புதுசா ஏதாவது காரணத்தை கண்டுபிடிச்சு சொல்லுவாங்க பாருங்க அதிகாரிகள்...யப்பா?!

 இந்நிலையில்   பேரணாம்பட்டு அருகே சிறுத்தைகள் தாக்கி மூன்று ஆடுகள் பலி விவசாயிகள் அச்சம் அடைந்திருக்கும் நிலையில் அங்கும் வனத்துறையினர் விசாரணை செய்தனர்.

   வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த செர்லப்பல்லி கிராமத்தை சேர்ந்த விவசாயி குருசாமி என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் ஆடு மாடுகளை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார்.

   இவருக்கு சொந்தமான விவசாய நிலம் காப்பு காட்டை ஒட்டி உள்ளதால் அருகே இருக்கும் காப்பு காட்டில் இருந்து இன்று காலை இரண்டு சிறுத்தைகள் குருசாமி நிலத்திற்குள் புகுந்து ஆட்டுப்பட்டியில் இருந்து மூன்று ஆடுகளை தாக்கி உள்ளது.

  இதில் இரண்டு ஆடுகள் பலியான நிலையில் ஒரு ஆட்டை காப்பு காட்டிற்குள் இழுத்து சென்றுள்ளது.

  இதனை அருகே இருந்து பார்த்த குருசாமி கூச்சலிட்டதில், சிறுத்தைகள் காட்டுக்குள் சென்றது.

  உடனடியாக பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 பட்டப் பகலில் விவசாய நிலத்துக்குள் 2 சிறுத்தைகள் வந்து ஆடுகளை தாக்கிய சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.