லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி! நடவடிக்கையில் இறங்கிய எஸ்.பி.!தூக்கியடிக்கப்பட்ட அதிகாரிகள்!

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி! நடவடிக்கையில் இறங்கிய எஸ்.பி.!தூக்கியடிக்கப்பட்ட அதிகாரிகள்!

க.இராஜா,

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி! நடவடிக்கையில் இறங்கிய எஸ்.பி.

மூன்று ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், வெளி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன் 12 காவல் நிலைய தனிப்பிரிவு போலீசார் தனிப்பிரிவில் இருந்து தூக்கப்பட்டார்.

   கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டது எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் அதிரடி  நடவடிக்கை எடுத்துள்ளது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  குறிப்பாக தக்கலை, குளச்சல், இரணியல், ஆகிய காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் 8 உதவி காவல் ஆய்வாளர்கள் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 மேலும் தக்கலை, குளச்சல், நேசமணி நகர், அஞ்சுகிராமம், ஆசாரிபள்ளம் உட்பட 12 காவல் நிலைய தனிப்பிரிவு போலீசார் தனிப்பிரிவிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.      குறிப்பாக, நேசமணி நகர் காவல் நிலைய காவலர் சதீஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

  இந்த அதிரடி நடவடிக்கை குமரி மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.

  இந்நிலையில் லஞ்சம் வாங்கும் போலீசாரை இனம் கண்டு அவர்களை களை எடுக்கும் பணி தொடரும் என்பதோடு அவர்கள் மீது பணியிடை நீக்கம் உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

  இது குமரி போலீசாரின் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

  தனக்கு கீழ் பணியாற்றக் கூடிய காவல் அதிகாரிகள் நேர்மையாக இஇருக்க வேண்டும் என்று குமரி எஸ்.பி. விரும்புவதைப்போலவே பாக்கி உள்ள 36 மாவட்டத்திலும் முடிவெடுத்தால் நலம்.