எதிர்கட்சி எங்களை வாழ்த்தவா போகிறது!அமைச்சர் துரைமுருகன் கருத்து!

எதிர்கட்சி எங்களை வாழ்த்தவா போகிறது!அமைச்சர் துரைமுருகன் கருத்து!

கு.அசோக்,

   வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் மழைவெள்ளத்தால் பாதித்த பகுதிகளை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு   -  நீர் நிலையை ஆக்கிரமிப்பவர்களுக்கு தெரியும் என்ன நிலைமை என்று - மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில்லை - எதிர்கட்சிகள் எங்களை வாழ்த்தவா போகிறார்கள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

  வேலூர்மாவட்டம்,காட்பாடியில் கழிஞ்சூர் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறும் பகுதிகளையும் கிளித்தான்பட்டறை  இரட்டை கண் வாராதி பகுதி வி.ஜி.ராவ் நகர் பகுதி,போன்ற இடங்களில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.

  அவருடன் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி,மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா மாமன்ற உறுப்பினர்  சரவணன் உள்ளிட்டோரும் அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனா.¢

 ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒரு மாதகாலமாக அரசு முழுக்க முழுக்க இந்த பருவ மழைகள் எல்லாம் மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

   அமைச்சர் மற்றும் திமுக பொறுப்பில் இருப்பவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் ஆனால் வேகமாக வரும்  தண்ணீரை கட்டுபடுத்தும் வழிமுறைகளை பேசி வருகிறோம். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க என்ன நடவடிக்கை என செய்தியாளர்கள் கேட்டதற்கு இங்கிருந்து வெளியே செல்லும் உபரி நீ£ பிரச்சனைக்கு¢ பாண்டியன் மதகு திட்டத்தின் மூலம் தீர்க்க ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளோம்.

  தற்போது பணியை துவங்கவுள்ளனர். அப்பணிகள் நிறைவடைந்தால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் பாதிப்பு இருக்காது.

 மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியை கொடுப்பதில்லை,  நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியரிடம் சொல்கிறேன் முதல்வர் சினிமா விமர்சகராக மாறிவிட்டதாகவும் விவசாயிகளை பற்றி கவலையில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு எதிர்க்கட்சி என்றால் அப்படி தான் சொல்லுவார்கள் எங்களை வாழ்த்தவா வாழ்த்துவார்கள்?

  நீர் நிலை ஆக்கிரமிப்பார்களுக்கு தெரியும் என்ன நிலைமை என்று மேலும் அதிகாரிகளுக்கு பருவ மழைக்கு முன்னரே மக்களுக்காக வெள்ளம் பாதிக்க்காமல் இருக்க பணி செய்ய உத்தரவிட்டுள்ளேன்  எஎன்று சொன்னார்.

 

 காட்பாடி பகுதியில் ஏரி தண்ணீர் வீதிகளில் வந்து மூழ்கியதால்  வீடுகள் கடைகளும் மூழ்கியது சித்தூர் கடலூர் தேசிய நெடுஞ்சாலையிலும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

     வேலூர்மாவட்டம்,காட்பாடியில் கழிஞ்சூர் ஏரி நிரம்பி உபரி நீர் காட்பாடி குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதில் மூன்று தெருக்களில் தண்ணீர் வீடுகளுக்குள்ளும், கடைகளிலும் தண்ணீர் பாய்ந்ததால் வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர்.

  மேலும்¢ கடலூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை பாதிக்கும் மேல் தண்ணீர் உள்ளது இதனால் வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.  பின்னர் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு நீரை வடியவைக்கும் பணிகள் ஈடுபட்டனா.

¢ இந்நிலையில், குடியாத்தம் அருகே மோர்தானா அணை  கால்வாய் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்த தண்ணீர் வெளிவர முடியாமல் மக்கள் அவதிபட்டனர்.

  வருவாய்த்துறை காவல்துறை தீயணைப்பு துறை உதவி உடன் பொதுமக்களை மீட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

  அதே பொல், குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் மோர்தனா அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் வலது புற கால்வாய் வழியாக நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு செல்கிறது.

  ஏரிக்கு செல்லும் கால்வாயில் இருந்து கிளை கால்வாய் நெல்லூர் பேட்டை ஊராட்சி லிங்குன்றம் மற்றும் கன்னிகாபுரம் இடையே செல்கிறது.

  இந்த கால்வாய் இரவு திடீரென உடைப்பு ஏற்பட்டு  கால்வாயில் சென்ற வெள்ளம்  நெல்லூர்பேட்டை ஊராட்சியில் லிங்குன்றம் பாலகிருஷ்ணா நகர் சின்னஒட்டு என்ற பகுதியில் நுழைந்து 50க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூழ்ந்தது.

  3 அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்த நிலையில் இரவு நேரத்தில் திடீரென வெள்ளம் கிராமத்திற்குள் நுழைந்து வீடுகளில் சூழ்ந்ததால்,வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

  தகவல் அறிந்த குடியாத்தம் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து வீடுகளில் சூழ்ந்து  தண்ணீரை ஏரிக்கு திருப்பி விடுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் சாலைகளை தோண்டி நீர் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

  தொடர்ந்து கால்வாயில் வரும் தண்ணீரால் வீடுகளில் உள்ள பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீடுகளில் இருந்த மாற்றுத்திறனாளி உள்பட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரையும் மீட்டு அருகில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

  தொடர்ந்து இரவு முழுவதும் காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மோர்தானா அனை கால்வாய் உடைப்பு ஏற்பட்டு கிராமத்திற்குள் நுழைந்த வெள்ள நீரால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

  குடியாத்தம் அருகே வீடுகளை சுற்றி உள்ள தண்ணீரை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் நடத்தினர்.