இப்போதாவது பேசுனீங்களே ரஜினி! போனில் அமைச்சர் துரைமுருகன்!

இப்போதாவது பேசுனீங்களே ரஜினி! போனில் அமைச்சர் துரைமுருகன்!

ஜி.சாந்தகுமார்,

 புத்தக விற்பனையில் ஒருலட்சம் பிரதிகளை கடந்தமைக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அதில்  நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், 'எ.வ.வேலுவோட புத்தக வெளியீட்டு விழாவில், திமுக-வில் ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்களை சமாளிக்கிறது கஷ்டம்னு பேசியிருந்தேன். அதுக்கு கிடைச்ச கைத்தட்டுல, அடுத்து சொல்ல வந்த 'ஆனாலும் ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்தான் ஒரு இயக்கத்தின் தூண், சிகரம். அவங்களோட அனுபவம்தான் பெரிய பலம் அப்டிங்றத சொல்ல மறந்துட்டேன்" என நகைச்சுவையாகப் பேசியிருந்தார். 

 திமுகவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வேலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ரஜினிகாந்தின் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு துரைமுருகன் "ரஜினிகிட்ட போனில் பேசினேன். ரொம்ப தேங்ஸ் ரஜினி. இப்போதாவது  மறக்காம பேசுனீங்களேன்னு சொன்னேன்" என பதில் அளித்தார்.  

 சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, "ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் புதிய மாணவர்களை எளிதாக சமாளித்துவிடுவார்கள்.  ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமில்லை. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல ரேங்க்  வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டுசெல்ல மாட்டேன் என்று அமர்ந்துள்ளனர். அமைச்சர் துரைமுருகன் கருணாநிதி கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர்" என்று சொல்லி கைதட்டுதல்களை பெற்றார்.

  ரஜினிகாந்த்தின் இந்த பேச்சு திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, முடி கொட்டி, பொக்கை வாயுடன் இருப்பவர்கள்  "வயதானவர்கள் எல்லாம் நடிப்பதால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது" சொன்னார்.

 இதன் மூலம் ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி கொடுத்தார். இந்த பிரச்சனையை பெரிதாக்கவிடாமல் வைரமுத்து இடைத்தரகராக செயல்பட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தார் என்பது நினைவுகூறத்தக்கது ஆகும்.