தாசில்தார் காலில் விழுந்த மக்கள்! பட்டாவுக்காக போராட்டம்!

தாசில்தார் காலில் விழுந்த மக்கள்! பட்டாவுக்காக போராட்டம்!

ஜி.கே.சேகரன்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா வேண்டி 50-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டம்   தாசில்தாரின் காலில் விழுது கதறிய பொதுமக்கள் குடும்ப அட்டை  மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை  ஒப்படைப்போம் என எச்சரிக்கை.

   திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தெக்கு பட்டு பகுதி சேர்ந்த ஜெயராகவன் என்பவர் 6 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வருவதாகவும் அந்த இடத்தில் தங்களுக்கு பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

   இந்நிலையில் அவர்கள்திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு  கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர்.

   அப்பொழுது, இதே போல பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி திடிரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

   அதனை அறிந்த நாட்றம்பள்ளி தாசில்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

   அப்போது திடீரென தாசில்தாரின் காலில் விழுந்தும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் கதறினர் அதனைத் தொடர்ந்து பட்டா வழங்கவில்லை என்றால்   எங்களுடைய ரேசன் கார்டு மற்றும் ஓட்டர் ஐடி கார்டை அனைத்தையும் அரசாங்திடம் ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.