இருட்டிலும் இக்கட்டிலும் மாட்டிக் கொண்டிருப்பது எடப்பாடி பழனிச்சாமி தான்! துரைமுருகன் பேட்டி!

கு.அசோக்,
இருட்டிலும் இக்கட்டிலும் மாட்டிக் கொண்டிருப்பது எடப்பாடி பழனிசாமி தான்!இருளை அகற்றி தமிழகத்தை ஒளி வீசச் செய்வதே என்னுடைய தீராத ஆசை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழக நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னதாக செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது அவரிடம், முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து விட்டும் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என்று எதிர் கட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளாரே,
என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவருக்கு என்ன தெரியும். எல்லாம் போயாச்சு.
எதிர்க்கட்சித் தலைவர் எங்களை பாராட்டிக் கொண்டா இருப்பார்? போய் அவரை பார்க்கச் சொல்லுங்கள்", என்றார்.
இருளை அகற்றி தமிழகத்தை ஒளி வீசச் செய்வதே என்னுடைய தீராத ஆசை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளாரே என கேட்டதற்கு, இருட்டில் மாட்டிக் கொண்டிருப்பது, இக்கட்டில் மாட்டிக் கொண்டிருப்பது இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி தான் என தெரிவித்தார்.