சுங்க வசூலில் சூப்பர் ஸ்டார்! விவசாயிகள் கோபம்!

ஜி.கே.கே.சேகரன்,
நாட்றம்பள்ளி பேரூராட்சி வார சந்தையில் அடாவடியாக அதிக சுங்க கட்டணம் வசூல்! கட்டுப்படுத்தாவிடில் மறியல் போராட்டம்! விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தையில், கிருஷ்ணகிரி, ஓசூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து காய்கறிகள், பழங்கள், ஆடு,கோழி, உள்ளிட்டவையை விற்பனை செய்து வருகின்றனர்.
அவர்களிடம் நாட்றம்பள்ளி பேரூராட்சி சார்பில் 150 முதல் 300 வரை கடைக்கு சுங்க கட்டண வசூல் செய்யப்படுவதால் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே சுங்க கட்டணத்தை 20 முதல் 50 ரூபாய் வரை வசூலிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை நாட்றம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது
எனவே இதே நிலை நீடித்தால் விவசாய சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.