திருமாவளவனுக்கு ராமதாஸ் மீது பாசம்:-திமுகவின் சூழ்ச்சி என்கிறார் அன்புமணி!

திருமாவளவனுக்கு ராமதாஸ் மீது பாசம்:-திமுகவின் சூழ்ச்சி என்கிறார் அன்புமணி!

ம.பா.கெஜராஜ்,

 பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று சமூக ஊடகப்பிரிவு கூட்டம் நடந்தது. அந்தக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், பாமகவில் முழு அதிகாரம் எனக்குத்தான் உள்ளது. பொதுக்குழுவை கூட்டவும், கட்சியை நடத்தவும், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பேருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

   அதிகாரம் மிக்கவர் நிறுவனர் என்கின்ற சட்டவிதி கிடையாது. 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு கூறினார். அய்யாவுக்கு பிறகு நான் தலைவராக வேண்டும் என அப்போதே முடிவெடுத்துவிட்டேன்.

   அவர் சொல்லித்தான் 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன். அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணி வேண்டாம் என சொல்லப் போகிறேன்.

சி.வி. சண்முகம் தைலாபுரம் வந்தபோதே கூட்டணி பற்றி பேசத்தான் வந்தார் என்று சொல்லியிருந்தால் நான் ஏன் வேண்டாம் என சொல்லப்போகிறேன்.

   நான் கேட்டபோது அழைப்பிதழ் வைக்க வந்ததாக என்னிடம் கூறினார். என்றைக்குமே அய்யாவை பற்றி புகழ்ந்து பேசாத திருமாவளவன், தற்போது பேசுவது ஏன்? ஐயா மீது வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ஏன் திடீர் அன்பு ஏற்பட்டுள்ளது.

  அய்யாவை செல்வப்பெருந்தகை திடீரென சந்திப்பது ஏன். இதெல்லாம் திமுகவின் சூழ்ச்சி.

வீட்டுக்கு வந்த மருமகளை பொது வெளியில் யாராவது விமர்சனம் செய்வார்களா? கடந்த 5 ஆண்டுகளாக அய்யா-வாக இல்லை.

   ஒரு குழந்தை போல மாறிவிட்டார் அவரை யாரும் சமூகவைத்தளத்தில் விமர்சிக்க வேண்டாம். அய்யா-வாக இருந்து எதனைசொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்து இருப்பேன்.3 பேர் தங்களது சுய லாபத்துக்காக அவரை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

   கொள்ளையடிப்பவன், கொலை செய்பவன், சாலையில் இலந்தை பழம் விறபவனுக்கு எல்லாம் பொறுப்பு வழங்குகிறார். பாமகவில் பயிர் எது? களை எது? என இப்போது தான் தெரிகிறது." எனப் பேசினார்..