லாக்கப் டெத்:-  "ஜெய்பீம் படம் பார்த்தேன் உள்ளம் உலுக்கியது" என சினிமா ரிவீவ் எழுதிய திமுக அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

லாக்கப் டெத்:-  "ஜெய்பீம் படம் பார்த்தேன் உள்ளம் உலுக்கியது" என சினிமா ரிவீவ் எழுதிய திமுக அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

பாலஜோதி,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்?தைச் சேர்ந்தவர் அஜித்குமார் திருமணமாகாத இவர், அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். அவர் பணியில் இருந்த போது  கோயிலுக்கு காரில் வந்த நிகிதா என்பவரது நகைகள் காணாமல் போனது.

 புகாரின் பேரில் அஜித்குமார் உள்ளிட்ட சிலரை திருப்புவனம் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

 அதில் அஜித்குமாரை நேற்று முன்தினம் விடுவித்த பின்னர், மீண்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர். 

 இந்நிலையில் உடல்?நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அஜித்குமாரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.    பிரேதப் பரிசோதனைக்காக அஜித்குமாரின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.

  விவரம் குடும்பத்தினருக்கு தெரிந்ததும் அவர்கள் காவல் நிலையம் முன் கூடினர்.  

   பிரேதப் பரிசோதனை செய்வதற்கு அஜித்குமாரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அஜித்குமாரை கொன்ற காவலாகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவாகள் வலியுறுத்தினர்.

 அப்போது, அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார் ஆகியோரை திமுக பிரமுகர் ஒருவரது காரில் ஏற்றி, உடலை வாங்குவதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் தலைமையிலான கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

  இந்த கொலை தொடாபாக திருப்புவனம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ் பிரசாத் நேற்று விசாரணை நடத்தினார்.

  மானாமதுரை உட்கோட்ட தனிப்படையைச் சேர்ந்த காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

  "ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா ரிவீவ் எழுதிய திமுக அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? காவல் நிலையத்தில் கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்தது குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

  அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருப்புவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

   "ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா ரிவீவ் எழுதிய திமுக அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்?. விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?

   தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது. தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

  திருப்புவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்' என்று அதில் தெரிவித்திருக்கிறார்.