வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயக்குமார் சஸ்பெண்டு!

வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயக்குமார் சஸ்பெண்டு!

 Ma.ba.Gajaraj,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சப்டிவிஷனில் டிஎஸ்பியாக இருந்தவர் விஜயகுமார்.  அவர் இன்று (ஜூன் 30) பணி ஓய்வு பெறுகிறார். ஆனால் பல்வேறு புகார்களுக்கு ஆளான அவர் முன் கூட்டியே சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்.

  சமீபத்தில் அவர் மீதான புகார்களை பட்டியலிடப்பட்ட போது, அவர் குறித்து முழு விவரங்களை திரட்ட மாநில உளவுத்துறை களம் இறங்கியதாம். அப்போது கிடைத்த தகவல்களை உயரதிகாரிகளுக்கு தெரிவித்த நிலையில் அவர்கள் அதிர்ந்துவிட்டனராம்.

 இந்நிலையில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார். எதற்கெடுத்தாலும் "டிவின்டிஃபைவ்" எனப்படும் அவரது சஸ்பெண்டு அவருடன் பணியாற்றிய பலருக்கு குறிப்பாக சில "இன்ஸி"களுக்கு இனிப்பு செய்தியாக மாறியிருக்கிறது. 

 இது ஒருபுறம்  இருக்க,அவருக்கு சொம்பு தூக்கி கொண்டிருந்த அயிட்டக்காரர்கள் தற்போது அந்த சொம்பை கழவி வைத்துக் கொண்டு அடுத்த டிஎஸ்பியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களாம்.

பலே.... பலே.