சல்லாப விடுதி மீது நடவடிக்கை பாயுமா?

கு.அசோக்,
வேலூரின் முக்கிய பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு எதிரில் தங்கும் விடுதி என்கிற பெயரில் சல்லாப பிசினஸ் நடந்துக் கொண்டிருக்கிறது. அதை தடுத்து நடவடிக்கை எடுக்கக்கூடியவரே பாதுகாப்பு கொடுத்து பத்திரப்படுத்தி வருகிறாராம்.
சமீபத்தில் கூட அப்படிப்பட்ட சல்லாப நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை அப்பகுதிவாசிகள் பிடித்துக் கொடுத்துள்ளார்கள். இதேபோல் மூன்று முறை பிடித்துக் கொடுத்துள்ளனர்.
அப்போதும் கூட அந்த விடுதி மீது, காக்கி சார்கள் கை வைக்கவில்லையாம்.
இதற்கெல்லாம் கேரளா நபர் ஒருவர் பின்புலமாக உள்ளாராம், அவர் தனக்கு நடசத்திர அதிகாரிகள் எல்லாம் தெரியும் என்று பீலா விட்டுக் கொண்டிருக்கிறாராம்.
இதுகுறித்து சப் டிவிஷன் அதிகாரியின் பார்வைக்கு கொண்டு சென்றபோது, அவர் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இல்லிங்கோ என்று மறுப்பு தெரிவித்துள்ளார். எங்கு? என்ன? ஏது? என்று விசாரிக்காமலே இவ்வாறு கூறியுள்ளார்.