மீண்டும் உயிர்பிக்கும் பெண்ட்லேண்ட் ஆஸ்பத்திரி:- எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு ம.சுப்பிரமணி பதிலடி!

கு.அசோக்,
அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அவர்கள் ஏன் மருத்துவ பணியாளர்களையும் டாக்டர்களை நியமிக்கவில்லை அவர்கள் அதனை செய்திருந்தால் நாங்கள் ஏன் செய்திருக்க வேண்டும் இதை எல்லாம் மறந்துவிட்டு பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி தானும் இருப்பதை காட்டிகொள்ள அறிக்கை விட்டுள்ளார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுகிறது அதனை பொறுத்துகொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி எதைப்பற்றியும் தெரியாமல் அறிக்கையை வெளியிடுகிறார் அவர் எப்போது வேண்டுமானால் எந்த மருத்துவமனையையும் ஆய்வு செய்யட்டும் அதற்கு நாங்கள் தயார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலூரில் பேட்டி-
வேலூர் மாவட்டம், வேலூரில் 198 கோடியில் புதியதாக அரசு பெண்ட்லேண்ட் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ,வேலு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் இன்று ஆய்வு மேற்கொண்டனர் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார் கார்த்திகேயன்,மேயர் சுஜாதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் அரசு பெண்ட்லேண்ட் மருத்துவமனை பாரம்பரிய மிக்க மருத்துவமனை இது அனைத்து வசதிகளுடன் 198 கோடிக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அதிக அளவில் மக்கள் வருவதால் இங்கு இடம் உள்ள காரணத்தினால் பெரிய மருத்துவ கட்டமைப்பை இங்கு துவங்க உள்ளோம்.
இதில் 560 படுக்கைகள் கொண்ட 11 அறுவை சிகிச்சை அரங்குகள் வரவிருக்கிறது தரைதளம் வரவேற்பு புறநோயாளி பிரிவுகள் மருந்தகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் பல்நோக்கு மருத்துவமனையானது கட்டப்பட்டுள்ளது.
நாளை (இன்று) ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 9 கட்டிடங்கள் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்படவுள்ளது. ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடமும் முதல்வர் திறந்து வைக்கவுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஆதரமில்லாமல் புரிதல் இல்லாமல் அறிக்கை வெளியிடுகிறார் அதனைவிசாரிக்காமல் பூதாகரமாக்கி விசாரக்காமல் அறிக்கை வெளியிடுகிறார்.
அப்படி அறிக்கைவிடுவது அவருக்கு வழக்கம் அடிப்படை வசதியில்லாமல் வேலூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறக்கபடவுள்ளதாக சொல்லியிருக்கிறார்.
அவருக்கு தொடர்ந்து நாங்கள் சொல்வது ஆதாரமில்லாமல் சொல்ல கூடாது நாளை காலை எடப்பாடி பழனிசாமி முதல்வர் திறப்பதற்கு முன்னரோ அல்லது பின்னரோ மருத்துவமனை வந்து அடிப்படை வசதிகள் கட்டமைப்புகள் பார்த்து அறிக்கை வெளியிடுவது நல்லது.
அவர் மேலும் சொல்லியிருக்கிறார் கட்டிடங்களை திறக்கின்றனர் ஆனால் போதிய மருத்துவர்கள் பணியாளர்களை நியமிக்கவில்லை என்று ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு அமைப்புகளின் 29773 பணியாளர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
பணிமாறுதலுக்கு வெளிப்படையான கலந்தாய்வுகள் நடக்கிறது நாங்கள் ஆய்வு செய்யும் இடங்களில் எல்லாம் வெளிபடை தன்மையான பணி நியமனம் மாறுதலுக்கு நன்றியை தெரிவிக்கின்றனர்.
இதனால் எடப்பாடி பழனிசாமி பொறாமையின் உச்சத்திற்கு சென்று இதனை தாங்கிகொள்ள முடியாமல் அறிக்கையை விடுகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க் மாநாட்டில் ஐநா சபை ஆய்வு செய்த போது தமிழ்நாடு வீடு தேடி மருத்துவம் பார்ப்பதை பாராட்டி ஐநா சபை சுகாதாரத்துறைக்கு விருது வழங்கியுள்ளது. மத்திய அரசின் சார்பில் 1500 விருதுகளை வழங்கியுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை பெற்ற விருதுகளை காட்டிலும் 4 ஆண்டுகள் திமுக ஆட்சியில் 12 சதவிகிதம் கூடுதலாக விருதுகளை பெற்றுள்ளோம்.
இப்படி மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாடுகள் மக்கள் முழு மன நிறைவுடன் உள்ளனர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைவிட்ருந்தர்.
தமிழகத்தில் போதை நடமாட்டம் அதிகமாக உள்ளதாக ஆனால் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பல துறைகளை முடுக்கிவிட்டு ஒன்றிய அரசின் சார்பில் தமிழ்நாட்டிற்கு 43 ஆயிரம் பள்ளிகள் அருகில் 1300 கிராமங்களில் பான் பராக்,.குட்கா விற்பதை தமிழக அரசு தடுத்துள்ளதாக ஒன்றிய அரசு விருதை வழங்கியுள்ளது.
இங்கு மருத்துவ பணியிடங்கள் நிரப்படவில்லை என்று இங்கு அடுக்கம்பாறையிலிருந்து இடமாற்றம் செய்யும் துறைகள் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகளும் தான் இங்கு செயல்படும், ஒவ்வொரு தளத்தையும் பயன்படுத்தும் போது அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இம்மருத்துவமனை முதல்வர் துவங்கி 10 நிமிடத்திலிருந்து புற நோயாளிகள் பிரிவு செயல்படும் 38 மருத்துவர்கள்,38முதுநிலை மாணவர்கள் செவிலியர்கள் 92 உள்ளிட்ட பணியாளர்கள் என மொத்தம் 218 பேர் இம்மருத்துவமனையில் பணியாற்றவுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி சுழற்சி முறையில் பணியாளர்களை மருத்துவமனைக்கு அனுப்புவதாக குற்றச்சாட்டை சொல்லியுள்ளார் ஆனால் 11 மருத்துவ கல்லூரிகளை இவர்கள் துவங்கினார்களே தவிர அதை எவ்வாறு திறந்தோம் என பொதுப்பணித்துறை அமைச்சர் விளக்கினார்.
மருத்துவமனைகள் 200 -,500 மருத்துவமனைபடுக்கைகள் உள்ளது ஊட்டி மருத்துவமனையை முதல்வர் திறந்து போது புதிய பணியாளர் நியமனம் இல்லை என்று சொல்லுகிறார் இருக்கும் மருத்துவர்கள் பணியாளர்களும் பயன்படுத்தபடுவார்கள் என்று சொன்னார்.
கலைஞரின் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனை என்ற திட்டத்தை பார்த்து தான் அதிமுகவும் செயல்படுத்தியது அதனை நாங்கள் ஆதாரங்களுடன் சொல்லுகிறோம்.
11 மருத்துவக்கல்லூரிகள் புதியதாக துவங்கபட்டவைகளுக்கு 11500 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 17566 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது 29773 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது மேலும் நேர்மையாக வெளிப்படை தன்மையுடன் 43155 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது.
இதில் எதாவது எடப்பாடிக்கு சந்தேகம் இருந்தால் அவரின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை அழைத்து எவ்வளவு பணிகள் நிரப்பட்டுள்ளது என்பதை ஆதரத்துடன் அலுவலகத்திற்கு வந்து பெற்று செல்லலாம்.
இன்றைக்கு ஒவ்வொரு கட்டிடமும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது ஒவ்வொரு மாவட்டத்திற்கு புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகள் ஒரு அடையாளத்தை தந்துள்ளது இவைகளை பொறுத்துகொள்ள முடியாமல் அரசின் மீது குறை சொல்லும் வகையில் சொல்லியிருக்கிறார்.
இதன் அம்சங்களை எடுத்தி சொல்லி ஊடகங்கள் மூலம் எடப்பாடி தெளிவு பெற வேண்டும் என்பதர்காக தான் இதனை சொல்கிறோம். 171 சித்தா யுனானி ஹோமியோபதி என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி பணியாணைகளை வழங்கவுள்ளோம்.
காலிபணியிடங்கள் 100 சதவிகிதம் நிரப்பட்டுள்ளது மருத்துவதுறை வரலாற்றில் காலிபணியிடங்கள் குறைவாக உள்ளது இப்போது மட்டும் தான். புதிய மருத்துவகல்லூரிகள் துவங்க ஜேபி நட்டாவை சந்தித்துள்ளோம்.
நேரடியாக சிறப்பு மருத்துவர்களை நியமிக்க முடியாது, 2642 மருத்துவர்களை நியமித்துள்ளோம் 300 சிறப்பு மருத்துவர்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகல் தாலுக்கா மருத்துமனைகள் தலைமை மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறோம்.
பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கூறுகையில் பாஜகவின் அச்சத்தால் தான் கரைந்து போய்விடுமோ என தன் இருப்பை காட்டிகொள்ள எடப்பாடி பழனிசாமி அறிக்கைகளை வெளியிடுகிறார் என கூறினார்.