பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்த சி.எம்.!அமைச்சர் நாடகமாடுகிறார் என்று பேசிக் கொண்ட திமுகவினர்!

ஜி.கே.சேகரன்,

  தமிழக முதல்வருக்கு வேலூரில் மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனை மற்றும் 7 ஆரம்பசுகாதார நிலையங்களை திறந்து வைத்தார் தமிழக முதல்வர். இந்நிலையில் அமைச்சர் துரைமுருகனின் சொந்தமாவட்டத்தில் நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் அவர் சற்றே ஒதுங்கியிருந்ததாகவும், வேறு விதமாகவும் திமுகவினர் மத்தியில் பேசப்பட்டது.

 வேலூர்மாவட்டம்,வேலூரில் செயல்பட்டு வந்த அரசு பெண்ட்லேண்ட் மருத்துவமனை ரூ.198 கோடியில் புதுப்பிக்கப்பட்டு பல் நோக்கு மருத்துவமனையாக உயர்த்தி கட்டப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற  இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

   அதற்காக சென்னையிலிருந்து ரயில் மூலம் காட்பாடி வந்து சேர்ந்தார்.

  காட்பாடி முதல் வேலூர் வரையில் பல இடங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வேலூரில் செல்லியம்மன் கோவில் முதல் திமுக மத்திய மாவட்ட அலுவலகம் வரையில் நடந்தே பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுகொண்டார் சி.எம்.

    இதன் பின்னர் வேலூர் பெண்ட்லேண்ட் அரசு பல்நோக்கு மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அத்துடன் 7 ஆரம்பசுகாதார நிலையங்களையும் இங்கிருந்தே காணொளி மூலம் துவங்கினார்.

  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, துரைமுருகன், ம.சுப்பிரமணி,ஆர்.காந்தி,நாசர், மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி  சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன்,நந்தகுமார், மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் பின்னர் சுற்றுலா மாளிகைக்கு முதல்வர் சென்றுவிட்டார்.

 முன்னதாக, வேலூர் மாவட்டத்தின் அமைச்சரும் திமுக பொதுசெயலாளருமான துரைமுருகன் இந்த நிகழ்ச்சியில் பட்டுபடாமலும் ஒதுங்கி இருந்தார். 

 முதல்வர் மருத்துவமனையை திறந்துவிட்டு சுற்றிபார்க்க சென்ற போது இவர் வெளியே வந்துவிட்டார் என்ன காரணம் என்பது திமுக தொண்டர்களுக்கே குழப்பமாக இருந்தது திமுகவில் இவர் ஓரங்கட்டபடுகிறார் அல்லது ஒதுங்கி கொள்கிறாரா என்பது தெரியவில்லை.

  இந்நிலையில் மாவட்டத்தின் சீனியரான ஒருவரின் மகன் மருத்துவராக உள்ளார். சொந்தமாக ஆஸ்பத்திரிகூட வைத்துள்ளார். அவர் பலருக்கு போனை போட்டு அமைச்சருக்கு உடம்பு சரியில்லை. சி.எம் அவரை அவரது வீட்டுக்கு போய் பார்க்க வேண்டும் எதிர்பார்த்து நாடகம் போடுகிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம்.

என்ன செய்வது எல்லாம் காலக் கொடுமைங்க பாய்?!