ஜெயலலிதா பிறந்த தினம்! எடப்பாடி மலர் தூவினார்!!

ஜி.சாந்தகுமார்,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக அதிமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களை மேற்கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்துவார்.