மருத்துவர்கள் யாரும்  மழைக்காலத்தில் விடுப்பு எடுக்க கூடாது!கலெக்டர் எச்சரிக்கை!

மருத்துவர்கள் யாரும்  மழைக்காலத்தில் விடுப்பு எடுக்க கூடாது!கலெக்டர் எச்சரிக்கை!

கு.அசோக்,

 பருவ கால மழை அதி கன மழை வேலூர் மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதால் மக்கள் முக்கிய காரணங்களின்றி வெளியில் வர கூடாது - மருத்துவர்கள் அன்றைய தினம் விடுப்பு எடுக்க கூடாது மரங்களை அப்புறப்படுத்தவும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் - ஏரி அணை மதகுகள் கால்வாய்களைசேதப்படுத்துபவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- மழைகுறித்த ஆலோசனை கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி பேச்சு.

  வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் கன மழை எச்சரிக்கை குறித்தும் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.

  இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை நெடுஞ்சாலைத்துறை சுகாதாரத்துறை காவல்துறை உள்ளிட்ட பலதுறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி அவர்கள் பேசுகையில் வேலூர் மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை உள்ளது.

  இருப்பினும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை, மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தினத்தன்று மக்கள் அவசிய காரணமின்றி வெளியில் வர கூடாது, மேலும் அன்றைய தினம் காய்ச்சல் தடுப்பு போன்ற தீவிர பணிகளில் ஈடுபட வேண்டும் மருத்துவர்கள் யாரும் அன்றைக்கு விடுப்பு எடுக்க கூடாது.

 நெடுஞ்சாலைத்துறையினர் மழையின் போது சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

 மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு அரிசி போன்றவைகள் வழங்க வேண்டும் மேலும் மழைகாலங்களில் ஏரி கால்வாய்கள் அணை நீர் வரத்து கால்வாய்கள் சேதப்படுத்துபவர்கள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியர் பேசினார்.