இழுக்க துடித்த திமுக.... தாவெகவுக்கு தாவிய செங்கோட்டையன்! கலைகட்டும் மேற்குத் தமிழகம்!
ம.பா.கெஜராஜ்,
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்னின்று தவெகவில் அய்கியமாகிறார். முன்னதாக அவர் எம்எல்ஏ பதவி ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் கொடுத்தார்.
முன்னதாக அவர் ஆழ்வார் பேட்டை வீட்டில் இருந்த போது அவரை அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதை அறிந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொங்கு மண்டல திமுகவை வலுப்படுத்தும் நோக்கில் செங்கோட்டையனை திமுகவுக்கு இழுக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அவருடன் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்இ அதில் செங்கோட்டையன் உறுதியான பதிலைத் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதிக்கு நேற்று மதியம் செங்கோட்டையன் வந்தார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய பிறகு தவெக தலைவர் விஜய்யை சந்திக்க பட்டினப்பாக்கம் புறப்பட்டார். அப்போது அவர் தனது காரில் செல்லாமல் ஆதவ் அர்ஜுனாவின் காரில் ஏறி பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
பட்டினப்பாக்கம் வீட்டில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். மாலை 4.30 மணி அளவில் தனது வீட்டுக்கு வந்த செங்கோட்டையனை விஜய் வரவேற்றார்.
தொடர்ந்து செங்கோட்டையனுக்கு தேநீரும் வழங்கி உபசரித்தார். விஜய் - செங்கோட்டையனின் இந்த சந்திப்பு மாலை 6.33 மணி வரை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. குறிப்பாக இந்த சந்திப்பின் போது செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைவது குறித்தும் அரசியல் நிலவரம் பற்றியும் விஜய்யுடன் ஆலோசனை நடத்தினார்.
செங்கோட்டையன் போன்ற அனுபவம் மிக்க தலைவர் தவெகவில் இணைவது கட்சிக்கு வலு சேர்க்கும் என்பதால் செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (27-ம் தேதி) காலை 10 மணிக்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் பலத்தைஇ செங்கோட்டையனின் கோட்டையான கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் நிரூபிக்கஇ நவ.30-ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டக்கு பழனிசாமி ஏற்பாடு செய்து வருகிறார்.
அது "புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ஆகுமா அல்லது எஸ்" ஆகுமா என பார்க்கத்தானே போகிறோம்.
குறிப்பு. தற்போது செங்கோட்டையன் அவர்கள் பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
அதுமட்டுமின்றி கோபிசெட்டிபாளையத்தில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பேருந்துகளில் வந்து தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

admin
