17 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்துக்கு அமைச்சர் உதயநிதி வருகை! ஆட்சியர் ஆய்வு!

ஆர்.ரமேஷ்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜீலை மாதம் 17 ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிவதையொட்டி, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு தெ.பாஸ்கரபாண்டியன் அவர்களும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அவர்களும், மண்டலவாடியில் நலதிட்ட உதவிகள் வழங்க விழா மேடை அமைக்கும் பணியையும், செட்டியப்பனூர், பாச்சல் ஆசிரியர் நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்கள்.