கே.பி.முனுசாமியின் பேச்சால் பாஜக - அதிமுக கூட்டில் விரிசலா? தராசு ஷ்யாம் விளக்கம்!

கே.பி.முனுசாமியின் பேச்சால் பாஜக - அதிமுக கூட்டில் விரிசலா? தராசு ஷ்யாம் விளக்கம்!

 ம.பா.கெஜராஜ்,

 அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் அரசியல் தந்திரம் பேச்சு கவனம் பெற்று வருகிறது. சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய கே.பி.முனுசாமி, தமிழகத்தில் நேரடி போட்டி என்றால் அதிமுக, திமுக ஆகியவற்றுக்கு இடையில் தான். பல கட்சிகள் நம்முடன் கூட்டு சேரலாம். ஆனால் களத்தில் நின்று போராடுபவன் அதிமுகவின் சாதாரண தொண்டன் தான்.

  அவனை எதிர்த்து போராடுபவன் திமுககாரனாக தான் இருப்பான். தேசிய கட்சிகள் யாரும் வருவதில்லை. கூட்டணி கட்சிகள் யாரும் வருவதில்லை என்று தெரிவித்தார். இது பாஜகவை சீண்டும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  வரும் 20ஆம் தேதி மதுரையில் அதிமுகவின் மாநாடு நடைபெறவுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் பிரமாண்டம் காணப்படுகிறது.

 ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டமாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதற்கு முன்னாள் அமைச்சர்கள் பலரும் தலைமை ஏற்று வருகின்றனர்.

  அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கே.க.பி.முனுசாமி பேச்சு பா.ஜ.வை கழற்றிவிடுவதைப்போல் உள்ளதாக கூறப்படுகிறது.

   இது தொடர்பாக அரசியல் திறனாய்வாளரும், மூத்த பத்திரிகையாளருமான தராசு ஷ்யாம், கே.பி.முனுசாமி பேச்சு சரி தான். தமிழகத்தில் எப்போதும் திராவிட கட்சிகளின் ஆட்சி தான். மோடியா, லேடியா என்ற பேசிய ஜெயலலிதா தற்போது இல்லை. அதேசமயம் மோடியா, ஈடி-யா என்ற கேள்வி எழுந்துள்ளது.

   மோடி உடன் கைகோர்ப்பதா? இல்லை ஈடி-ன் விசாரணை வளையத்திற்குள் சிக்குவதா? என்பது தான் கள யதார்த்தமாக மாறியிருக்கிறது. தற்போதைய சூழலில் அதிமுகவின் ஓட்டு வங்கியில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதை மறுக்க முடியாது. இந்த விஷயத்தை வரும் மக்களவை தேர்தல் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதிமுகவை பொறுத்தவரை 2024 மக்களவை தேர்தலை காட்டிலும் 2026 சட்டமன்ற தேர்தலை தான் பெரிதாக எதிர்பார்த்து காத்திருப்பதாக தோன்றுகிறது.

 அதேசமயம் அடுத்து வரும் தேர்தலில் வாக்குகள் பரிமாற்றம் தேவை என பாஜக எதிர்பார்க்கிறது. அதிமுக வாக்குகள் பாஜகவிற்கும், பாஜக வாக்குகள் அதிமுகவிற்கும் கிடைக்க வேண்டும். இதில் முதல் விஷயம் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் பாஜக வாக்குகள் அதிமுகவிற்கு கிடைக்க வாய்ப்புகள் இல்லை என்று கூறினார்.

இதையெல்லாம் வைத்து பார்கிற பொழுது கே.பி.முனுசாமியின் பேச்சில் பொடிவைத்துள்ளார் என்பதுதான் யதார்த்தம்.