ரஷியா உடனான இந்திய உறவு "நம்பக்கத்தன்மை கொண்டது' பிரதமர் பேச்சு!

ரஷியா உடனான இந்திய உறவு "நம்பக்கத்தன்மை கொண்டது' பிரதமர் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

 ரஷியா இடையேயான உறவு தனித்துவமான மற்றும் நம்பக்கத்தன்மை கொண்ட நட்பாகும்' என பிரதமர் மோடி பேச்சு!

  டெல்லியில்இந்தியா - ரஷியா இடையேயான 21-வது உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில்இந்திய பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுள்ளனர்.

 மேற்படி 21-வது உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

 இந்த மாநாட்டின் போது பேசிய பிரதமர் மோடி, கொரோனாவால் பல்வேறு சவால்களை சந்தித்தபோது இந்தியா - ரஷியா இடையேயான நட்பு வளர்ந்து கொண்டு செல்கிறது.

 நமது சிறப்பு வாய்த மற்றும் யுக்தி நிறைந்த கூட்டணி தொடர்ந்து வலிமையடைந்து வருகிறது.

கடந்த சில தசாப்தங்களில் உலகம் பல்வேறு அடிப்படை மாற்றங்களை கண்டுள்ளது. வேவ்வெறு புவிசார் அரசியல் கூட்டணிகள் உருவெடுத்து வருகின்றன. ஆனால், இந்தியா - ரஷியா இடையேயான நட்பு தொடர்ந்து நிலையாக உள்ளது. இந்தியா - ரஷியா இடையேயான உறவு தனித்துவமான மற்றும் நம்பக்கத்தன்மை கொண்ட நட்பாகும்' என்றார்.