மணல் குவாரிக்கு அனுமதி வழங்கு! இல்லையேல் சாகும் வரை போராட்டம்... ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம்!
கு.அசோக்,
சக்கரமல்லூர் கிராம அருகே பாலாற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமம் அருகே செல்லக்கூடிய பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து இருப்பதாகவும் இதனால் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதாகவும்,
மேலும் வங்கிகளில் பெறப்பட்டிருக்கக்கூடிய கடன் மற்றும் லோன் போன்ற தொகைகள் மற்றும் வட்டிகளை திரும்ப செலுத்த முடியாமல் வங்கி நிர்வாகத்தினரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது குறித்தும் பேசினர்.
மேலும் கடன் பெற்ற நபர்களுக்கு பிடிவாரன்ட் போடப்படுவதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதாக வேதனையாக கண்டன உரையாக எழுப்பினர். ¢எனவே மாவட்ட நிர்வாகத்தினர் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சக்கரமல்லூர் கிராம பகுதி அருகே பாலாற்றில் மணல் குவாரி திறப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
அனுமதி கொடுக்காமல் இழுத்தால், வருகின்ற காலகட்டங்களில் சாகும் வரை உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

admin
